Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்..

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 93.21 புள்ளிகள் அதிகரித்து 29454.71 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.50 புள்ளிகள் அதிகரித்து 8932.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. பட்ஜெட் அன்றும் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 250 ரூபாய் அதிகரித்து 26,477 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,708 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,532 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து 3,064 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 62.58 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.59 டாலர் அதிகரித்து 49.76 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.85 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
 
ஆக்ஸிஸ் பேங்க்         3.47%
அம்புஜா சிமென்ட்ஸ் 2.79%
பி ஹெச் இ எல்                 2.55%
ஏ சி சி                                 2.55%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 2.42%

இறக்கப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் -3.12%
ஐ டி சி                         -2.41%
கெயில்                         -1.57%
பேங்க் ஆஃப் பரோடா -1.05%
ஹெச் சி எல் டெக்         -0.51%
.........................................................
11.30 மணி நிலவரம்   
தேக்க நிலையில் இந்திய சந்தைகள்.......
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  15.91 புள்ளிகள் அதிகரித்து 29377.41  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 15.60 புள்ளிகள் அதிகரித்து  8917.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 283 ரூபாய் அதிகரித்து 26,760 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து 3,076 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.84 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
தற்போது இந்திய சந்தைகளில் வங்கி, மூலதன பொருட்கள் ஹெல்த்கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. எஃப்எம்சிஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்,  மெட்டல்  போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றப் பங்குகள்   
பிபிசிஎல்            4.46%
ஆக்ஸிஸ் பேங்க்        3.31%
ஏ சி சி            2.98%
அல்ட்ராடெக் சிமென்ட்    2.95%
எல் & டி            2.94%

இறக்கப் பங்குகள்
ஐடிசி            -3.96%
ஜிண்டால் ஸ்டீல்        -3.93%
பாஜாஜ் ஆட்டோ        -3.31%
பேங் ஆஃப் பரோடா        -2.27%
கெயில்             -1.94%
.....................
 
1.30 மணி நிலவரம்
நிலையில்லாத இந்திய  சந்தைகள்...
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  95.10 புள்ளிகள் குறைந்து 29266.40  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 7.50 புள்ளிகள் குறைந்து 8894.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 253 ரூபாய் அதிகரித்து 26,730 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து 3066 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும் தேக்க நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை ஷாங்காய் காம்போஸைட் அதிகபட்சமாக 0.77% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்தபட்சமாக எஸ்.இ.டி காம்போஸைட் 0.47% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்    6.57%
க்ராஸிம்                5.24%
ஏ சி சி                4.34%
பிபிசிஎல்            4.24%
ஆக்ஸிஸ் வங்கி        4.05%

இறக்கப் பங்குகள்
ஐ டி சி                -4.08%
பஜாஜ் ஆட்டோ        -4.05%
ஜிண்டால் ஸ்டீல்        -3.22%
டாடா மோட்டார்ஸ்        -2.59%
பேங்க் ஆஃப் பரோடா        -2.32%
......................................
3.30 மணி நிலவரம்   
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்........
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  127.98 புள்ளிகள் அதிகரித்து 29489.48 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  தற்போது 64.75 புள்ளிகள் அதிகரித்து   8966.60 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 186 ரூபாய் அதிகரித்து 26,663 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 3071 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.96 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர முடிவில்  வங்கி, மூலதன பொருட்கள், ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1506 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1333 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 197 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 28 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 22 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்    7.54%
க்ராசிம்                6.04%
சிப்லா                6.00%
ஆக்ஸிஸ் பேங்க்            5.91%
ஐ டி எஃப் சி                5.17%



இறக்கப் பங்குகள்   
ஐ டி சி                -4.95%
பஜாஜ் ஆட்டோ            -3.76%
ஜிண்டால் ஸ்டீல்            -3.70%
ஹீரோ மோட்டோகார்ப்        -2.18%
பார்தி ஏர்டெல்             -1.92%

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ