Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன் மற்றும் கால் கட்டணங்கள் உயர்வு?

ஸ்மார்ட்போன் மற்றும் கால் கட்டணங்கள் உயர்வு........ பட்ஜட் எதிரொலி
மத்திய அரசு அறிவித்த 2015 – 2016-ம் ஆண்டு பட்ஜட்டில் கலால் வரி மற்றும் சேவை வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனால் ஸ்மார்ட்போன்கள் 3 – 5% வரை விலை அதிகரிக்கும்..
இந்தியாவில் பயன்படுத்தப்படும்  ஸ்மார்ட்போன்களில்  70 சதவிகிதத்துக்கும் மேலான ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கும்  கலால் வரியால் வெளிநாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், மோட்டோரோலா, ஜியாமி.... போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போன்களின் உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி பாகங்களுக்கு உற்பத்தியாளர்கள் சில டியூட்டி சலுகைகளைப் பெறலாம் என்பது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
சேவை வரி  2% அதிகரிப்பு மற்றும் 2% செஸ் வரி ஆகியவைகள் சேர்ந்து மொத்தமாக சேவை வரியில் நான்கு சதவிகிதம் அதிகரித்ததால் கால் கட்டணங்கள், டேட்டா டாரிஃப், இன்டர்நெட் கட்டணங்கள் என்று அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் விலை உயர இருக்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ