Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய பட்ஜட் தாக்கங்கள்...

மத்திய பட்ஜட் தாக்கம்    
மொபைல் போன்களுக்கான கலால் வரி (சென்வாட் க்ரெடிட் உடன்)  6% சதவிகிதமாக இருந்த வரி தற்போது 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட எல்இடி விலக்குகளுக்கு வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தவேண்டிய மின்சார கட்டணம் வழக்கத்தைவிட கூடுதலாகக் கட்டவேண்டி இருக்கும்.
இன்று இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும்  மினரல் வாட்டர் மற்றும் ஏரேடட் வாட்டர் என்றழைக்கப்படும் சோடா போன்றவைகளுக்கு 6 சதவிகிதம் கலால் வரி உயர்த்தப்பட்டு 18 சதவிகிதம் வசூலிக்கப்படும்.
பீனட் பட்டர் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் போன்ற உயர் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு புதிதாக 6 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
 1,000 ரூபாய்க்கு அதிகம் விலையுள்ள லெதர் ஷூக்களுக்கு (Shoe) வசூலிக்கப்பட்டு வந்த 12 சதவிகித கலால் வரி தற்போது 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மொபைல் போன்கள் மூலம் புக் செய்து பயணிக்கும் ரேடியோ கேப்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு விமான பயண கட்டணங்கள் சேவை வரி உயர்வால் விலை உயரும்.
சேவை வரி உயர்வு (1.64% ) மற்றும்  2 % செஸ் வரி (இன்னும் அமல்படுத்தவில்லை) ஆகியவற்றால் சினிமா தியேட்டர்கள், அம்யூஸ்மென்ட் பார்க்குகள், சிகை அலங்காரக் கடைகள், ரெஸ்டாரன்ட்டுகள், ஹோட்டல்கள், பீட்ஸா கடைகள் போன்ற இடங்களில் அதிக விலை கொடுத்து சேவைகளையும், பொருட்களையும் வாங்க வேண்டி இருக்கும்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ