Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரும்பு இறக்குமதிக்கு வரி: ஸ்டீல் துறைக்கு பயன் தருமா?

இரும்பு இறக்குமதிக்கு வரி:
ஸ்டீல் துறைக்குப் பயன் தருமா?

ஷியாம் சுந்தர்,
கமாடிட்டி நிபுணர்.
இந்த அறிவிப்பினால் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குப் பயன் தருமா என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.


உலகின் ஸ்டீல் உற்பத்தியில் நான்காவது இடத்தில்  இருக்கிறது நம் இந்தியா. இந்த   2015 -ம் ஆண்டில் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள்  பெரிய   சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது . 2014  முதல்  11 மாதங்களில் இந்தியாவின் உற்பத்தியானது தேவை குறைந்து காணப்பட்ட நிலையில், உலகின் சராசரி உற்பத்தியைவிட  அதிகரித்துள்ளது.


2009 -10-ல் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி 65 மில்லியன் டன்களாக இருந்தது, 2014-15-ல் 91 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது .ஏற்கெனவே உள்நாட்டு  உற்பத்தி அதிகரித்த நிலையில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது , உள்நாட்டு நிறுவனங்களுக்கு கவலை அளிப்பதாக  இருக்கிறது 


நம் நாட்டில் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா , பிரேசில் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இன்றைக்கு இதே நிலைமைதான் காணப்படுகிறது. உலகின் இரும்புத்தாது உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பிரேசில் நாட்டின்  வேல்  (vale )  நிறுவனம் தனது நான்காவது காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.


இந்திய அரசாங்கம்,  சுரங்கத் துறையின்  மீதான கட்டுப்பாடுகள் காரணமாக , இரும்புத்தாது கிடைப்பதில் ஸ்டீல் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இருப்புத்தாது எடுப்பது தடைபட்டுள்ள நிலையில், ஸ்டீல்  நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தன . இரும்புத்தாதுவின் சர்வதேச விலை  ஒரு வருடத்துக்கு முன்பாக 1 மெட்ரிக் டன் 128 டாலர்களாக இருந்தது, தற்போது அது 62 டாலர்களாக  வர்த்தகமாகி வருகிறது.


ஒருபக்கம், உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு இரும்புத்தாது   கிடைக்காத நிலை, அதேசமயத்தில் சீனா , ரஷ்யாவிலிருந்து பெருமளவிலான ஸ்டீல் இறக்குமதி, இவையெல்லாம், இந்திய ஸ்டீல் நிறுவனங்களைக் கவலை அடையச் செய்துள்ளன.


இந்த பட்ஜெட்டில் ஸ்டீல் இறக்குமதிக்கு வரி அதிகப்படுத்தியதால், இந்திய நிறுவனங்களுக்கு , சிறிய அளவிலான நற்செய்தியாகப்   பார்க்கப்படுகிறது.


இதுவரை இரும்புத்தாதுவின்  சர்வதேச விலையானது  இந்தியா இறக்குமதி செய்த நிலையிலேயே 62 டாலர்கள் இருப்பது, தற்போது  ஸ்டீல் மீதான இறக்குமதி வரி உயர்வால்,  பன்னாட்டு இரும்புத்தாதுவின் விலை மேலும் சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


உள்நாட்டில் இருபுத்தாது கிடைக்காதது, இறக்குமதி அதிகரிப்பு , கட்டுமானத் துறையில் காணப்படுகிற தொய்வு , தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பு இவை அனைத்தும்  ஸ்டீல் நிறுவனங்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது .

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ