Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் இறக்கம்


பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் இறக்கம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை வெளியாகி உள்ளது. அதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையைவிட இந்த ஆண்டு 22 சதவிகிதம் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இதன் பங்குகள் 5 சதவிகிதம் குறைந்து 2,062 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
2015 பிப்ரவரியில் மொத்த விற்பனையாக (அனைத்து ரக வாகனங்கள்) 2,43,319 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்த விற்பனையாக (அனைத்து ரக வாகனங்கள்) 3,13,294 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
இருசக்கர வாகனங்கள் 2015 பிப்ரவரியில் 2,16,077 வாகனங்களையும், 2014 பிப்ரவரியில் 2,73,323 வாகனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. இது 21 சதவிகித சரிவு.
அதேபோல், வணிக வாகனங்களில் 2015 பிப்ரவரியில் 27,242 வாகனங்களையும், 2014 பிப்ரவரியில் 39,971 வாகனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. இது 32 சதவிகித சரிவாகும்.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 2,161 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி 2204 என்கிற உச்சத்தைத் தொட்டு தற்போது 2062 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. காலை 11.35 மணி வரை பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ சந்தைகளில் 3,91,819 பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ