Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் 20% உயர்வு

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் 20% உயர்வு
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சின்  பங்குகள் சனிக்கிழமை (28 பிப்ரவரி 2015) பிஎஸ்இ-யில் 13 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது. அதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் ஏழு சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
எஃப்.எம்.சி என்று அழைக்கப்படும்  ஃபார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் செபியோடு இணைக்கப்படும் அறிவிப்பால்தான் இந்த உயர்வு என்று கூறப்படுகிறது. இந்த எஃப்.எம்.சி செபியோடு இணைப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகளும் செபிக்கு கீழ் இயங்கும்.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 1,194 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய எம்.சி.எக்ஸ் பங்குகள் சிறிது நேரத்திலேயே ரூ.1,285 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. . காலை 10.50 மணி வரை மட்டும் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ சந்தைகளில் 25 லட்சம் பங்குகளுக்கு அதிகமாக வர்த்தகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ