Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஷர் (Eicher) மோட்டார்ஸ் பங்கு விலை உயர்வு

ஐஷர் (Eicher)  மோட்டார்ஸ் பங்கு விலை உயர்வு
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் தன் 2015 பிப்ரவரி மாத விற்பனையை வெளியிட்டதும், அதன் பங்குகளின் விலை 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
350 சிசிக்கு குறைவான திறன்கொண்ட 26,499 இருசக்கர வாகனங்கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2014 பிப்ரவரியைக்காட்டிலும் 50% உயர்வு.
350 சிசிக்கு அதிகமான திறன்கொண்ட  3,741 இருசக்கர வாகனங்கள் 2015 பிப்ரவரியில் விற்பனையானது. இது கடந்த 2014 பிப்ரவரியைக்காட்டிலும் 43% விற்பனை உயர்வு.
இந்த நிறுவனம் 2015 பிப்ரவரியில் 749 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதே காலகட்டத்தில் 2014-ல் செய்ததைவிட  இது 49% அதிகம்.
ஐஷர் மோட்டார்ஸின் பங்குகள் காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 16,510 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, காலை 10.15-க்கு தன் புதிய உச்சமான 16,699 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. காலை 10.15 மணி வரை மட்டும் 23,000-க்கும் அதிகமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close