Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமான நிறுவன பங்குகள் இறக்கத்தில் வர்த்தகம்.

விமான நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகம்.


ஏர் டர்பைன் ஃப்யூல் (Air Turbine Fuel) என்றழைக்கப்படும் விமான எரிபொருளின் விலை, எண்ணெய் நிறுவனங்களால் 8.2 சதவிகிதம்  உயர்த்தப்பட்டதால் 4 – 5 சதவிகிதம் பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகிறது.
டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு 50,363 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையேற்றத்துக்கு முன்பு 46,513 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த விலை உயர்வு  2015 பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவிலிருந்து அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
விமான நிறுவனங்களின் செலவுகளில் முதல் இடத்தில் இருப்பது இந்த எரிபொருள்தான். மொத்த செலவில் 40 சதவிகிதம் எரிபொருளுக்குச் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட் ஏர்வேஸ் 4% குறைந்து ரூபாய் 425-க்கு வர்த்தகமாகிறது. காலை 9.45 மணி வரை மட்டும் 3,30,000 பங்குகள் (இரு பங்குச் சந்தைகளிலும்) வர்த்தகமாகி இருக்கிறது.
அதேபோல் ஸ்பைஸ்ஜெட் 4 % குறைந்து ரூபாய் 22க்கு வர்த்தகமாகிறது. காலை 9.45 மணி வரை மட்டும் (இரு பங்குச் சந்தைகளிலும்)  16 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close