Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...

3.30 மணி நிலவரம்   
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  166.74 புள்ளிகள் அதிகரித்து 29625.88 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  தற்போது 41.95 புள்ளிகள் அதிகரித்து   8988.70 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை நான்கு ரூபாய் அதிகரித்து 26,514 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்து 3125 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர முடிவில்  ஐ.டி, ஆயில் அண்ட் கேஸ் ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல்,மெட்டல், வங்கி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,666 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1184 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 146 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 29 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 21 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்
ரிலையன்ஸ்            4.23%
டிசிஎஸ்            3.99%
பேங்க் ஆஃப் பரோடா    2.63%
ஜிண்டால் ஸ்டீல்        2.49%
பி என் பி            2.11%
இறக்கப் பங்குகள்   
கோல் இந்தியா    -3.83%
எம் அண்ட் எம்    -3.64%
ஆக்ஸிஸ் வங்கி    -2.49%
டி எல் எஃப்    -2.10%
டாடா மோட்டார்ஸ்    -1.86%...............................

1.30 மணி நிலவரம்
சற்றே ஏற்றத்தில் இந்திய  சந்தைகள்.......
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  80.78 புள்ளிகள் அதிகரித்து 29539.92  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 17.35 புள்ளிகள்  அதிகரித்து 8974.10 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.23 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 26,465 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 38 ரூபாய் குறைந்து 3111 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.83 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
உலக அளவில் அமெரிக்கச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.57% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்தபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 2.19% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
ரிலையன்ஸ்            4.04%
டி சி எஸ்            2.79%
சிப்லா                2.75%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    2.72%
சன் பார்மா            2.55%
இறக்கப் பங்குகள்
கோல் இந்தியா        -4.89%
எம் அண்ட் எம்            -3.22%
ஆக்ஸிஸ் பேங்க்        -2.31%
அம்புஜா சிமென்ட்ஸ்        -2.31%
டி எல் எஃப்            -1.81%..................................

11.30 மணி நிலவரம்   
தேக்க நிலையில் இந்திய சந்தைகள்.......
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  19.37 புள்ளிகள் குறைந்து 29439.77  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 12.80 புள்ளிகள் அதிகரித்து  8943.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 16 ரூபாய் குறைந்து 26,494 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,694 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 கார தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2519 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 26 ரூபாய் குறைந்து 3,123 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு ஒரேநாளில் 3.04 டாலர் குறைந்து 59.54 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 49.59 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்
   
டிசிஎஸ்            2.55%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    2.16%
சன் பார்மா            1.99%
ரிலையன்ஸ்            1.77%
விப்ரோ            1.50%

இறக்கப் பங்குகள்

கோல் இந்தியா        -4.81%
எம் அண்ட் எம்            -3.21%
அம்புஜா சிமென்ட்ஸ்        -2.31%
ஆக்ஸிஸ் பேங்க்        -2.29%
டாடா மோட்டார்ஸ்        -2.00%
......................

9.30 மணி நிலவரம்
இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய இந்திய சந்தைகள்...
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 41.12 புள்ளிகள் குறைந்து 29418.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.40 புள்ளிகள் குறைந்து 8938.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிய சந்தைகள் இன்று இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கியது கவனிக்கத்தக்கது
10 கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் அதிகரித்து 26,510 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 3,149 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.90 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
தற்போது இந்திய சந்தைகளில் ஹெல்த் கேர், ஐ.டி, மிட் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஆட்டோமொபைல், மெட்டல், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல்        1.64%
டிசிஎஸ்                1.59%
சன் பார்மா                1.50%
ரிலையன்ஸ்                1.48%
ஏசியன் பெயின்ட்ஸ்        1.14%

இறக்கப் பங்குகள்

கோல் இந்தியா        -5.29%
எம் அண்ட் எம்            -2.52%
ஆக்ஸிஸ் வங்கி        -1.75%
டாடா மோட்டார்ஸ்        -1.65%
அம்புஜா சிமென்ட்ஸ்        -1.56%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ