Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம்


டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை வெளியான பிறகு அந்த நிறுவன பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 286-க்கு வர்த்தகமாகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை (இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனம்)  2015 பிப்ரவரியில் 2,04,565 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,77,662 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 15 சதவிகிதம் உயர்வாகும்.
இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 2015 பிப்ரவரியில் 1,95,509 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. 2014 பிப்ரவரியில் 1,70,293 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 15 சதவிகித உயர்வு.
மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 2015 பிப்ரவரியில் 9,056 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இதே  காலகடத்தில் கடந்த ஆண்டில் 7,369 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 23% வளர்ச்சி ஆகும்.
ஸ்கூட்டர்கள் விற்பனையும் 35% அதிகரித்திருக்கிறது. 2015 பிப்ரவரியில் 56,750 வாகனங்களையும், 2014 பிப்ரவரியில் 41,990 வாகனங்களையும் விற்றிருக்கிறது. இது 35 சதவிகித உயர்வு.
இந்தப் பங்கு காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 287 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது என்எஸ்இ-ல் 295.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. கிட்டத்தட்ட என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகளில் 7,47,033 பங்குகளுக்கு அதிகமான பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ