Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹோட்டல் லீலாவெஞ்சர் பங்குகள் உயர்வு

ஹோட்டல் லீலாவெஞ்சர் பங்குகள் உயர்வு


ஜே.எம் ஃபைனான்ஷியல் இன்ஸ்டிட்டியூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்,  சென்னை மற்றும் கோவாவில் உள்ள லீலா ஹோட்டலை வாங்க இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான  உடன் லீலாவெஞ்சர் பங்குகள் 12 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 23.95-க்கு அதிகமாக வர்த்தகமாகி வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர் ) இந்த ஹோட்டல் நிறுவனம் 460 கோடி நிகர நஷ்டத்தைக் காட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தைவிட இது 20 சதவிகிதம் அதிகம்.
இந்த நிறுவனத்தின் பங்கு காலை வர்த்தக நேர தொடக்கத்தில் ரூபாய் 22-க்கு வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 24.20 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.  இன்று காலை 10.00 மணி வரை மட்டும் 23.6 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ-ல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 லட்சம் பங்குகளுக்குமேல் வர்த்தகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ