Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 30000! நிஃப்டி 9000!: ஆர்பிஐ கடன் வட்டி விகிதத்தை குறைத்ததால் உச்சத்தில் சந்தைகள்

சென்செக்ஸ் 30000! நிஃப்டி 9000!: ஆர்பிஐ கடன் வட்டி விகிதத்தை குறைத்ததால் உச்சத்தில் சந்தைகள்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 283.60 புள்ளிகள் அதிகரித்து 29877.33 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 75.15 புள்ளிகள் அதிகரித்து 9071.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 83 ரூபாய் குறைந்து 26427 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 11 ரூபாய் குறைந்து 3138 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.83 ரூபாய்க்கு நிலையாக வர்த்தகமாகிறது.
 
ஆர்பிஐ கடன் வட்டி விகிதத்தை 7.75 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி புதிய உச்சங்களை தொட்டு வர்த்தகமாகின்றன.
 
இந்தியாவின் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. அதிகபட்ச ஏற்றத்தில் வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் போன்ற துறை சார்ந்த பங்குகள் வர்த்தகமாகின்றன. குறைந்தபட்ச ஏற்றாத்தில் மெட்டல், டெக்னாலஜி, ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
டி எல் எஃப் 3.17%
பி என் பி 2.54%
கோட்டக் மஹிந்திரா 2.51%
பேங்க் ஆஃப் பரொடா 2.32%
எஸ் பி ஐ 1.98%
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -0.93%
க்ராசிம் -0.70%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -0.67%
ஹிண்டால்கோ -0.50%
விப்ரோ -0.48%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ