Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...

 ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...


மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  68.22 புள்ளிகள் அதிகரித்து 29448.95 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  தற்போது 15.10 புள்ளிகள் அதிகரித்து   8937.75 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் குறைந்து  26,470 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 97 ரூபாய் அதிகரித்து 3260 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.22 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தக நேர முடிவில்  ஹெல்த் கேர், வங்கி, மிட் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மூலதன பொருட்கள், மெட்டல் ஐ.டி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. 

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1410 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1440 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 123 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 20 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 30 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

சன் பார்மா 3.22%
லுபின் 2.85%
ஹெச் யூ எல் 2.58%
பேங்க் ஆஃப் பரொடா 2.02%
ஹெச் டி எஃப் சி 1.98%

இறக்கப் பங்குகள்

என் எம் டி சி -3.96%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்-3.65%
ஹிண்டால்கோ -3.27%
க்ராசிம் -2.53%
கோல் இந்தியா -2.05%
 

 

தேக்கதில் இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 41.51 புள்ளிகள் அதிகரித்து 29422.24 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 5.25 புள்ளிகள் அதிகரித்து 8927.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.10 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 21 ரூபாய் குறைந்து 26,526 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2703 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 கார தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2527 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 71 ரூபாய் அதிகரித்து 3,234 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 60.55 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா என்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 51.53 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.19 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்

ஹெச் யூ எல் 2.36%
லுபின் 2.11%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.64%
சன் பார்மா 1.56%
விப்ரோ 1.55%

இறக்கப் பங்குகள்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் -3.09%
கெர்ய்ன் இந்தியா -3.07%
ஏ சி சி -2.08%
ஹிண்டால்கோ -2.06%

 

ஐசிஐசிஐ பேங்க் -1.67%

 

 ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 96.05 புள்ளிகள் அதிகரித்து 29476.78 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.60 புள்ளிகள் அதிகரித்து 8943.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் அதிவேக ஏற்றத்தில் வர்த்தகமாகி வர்த்தக நேர முடிவில் இறக்கத்தில் நிறைடடைந்தது, ஆனால் இன்று காலை இந்திய சந்தைகள் தற்போதைய நிலவரப்படி 0.28% ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

10 கிராம் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 26547 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 3163 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை நேற்றைய மதிப்பை விட இன்று அதிகரித்திருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி அனைத்து துறைகளும் மந்த நிலையில் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. அதிகபட்ச ஏற்றத்தில் ஹெல்த் கேர், எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் வர்த்தகமாகின்றன. குறைந்தபட்ச ஏற்றத்தில் வங்கி, டெக்னாலஜி, பொதுத்துறை நிறுவனம் போன்ற துறை சார்ந்த பங்குகள் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

சிப்லா                                   2.03%
சன் பார்மா                           1.74%
லுபின்                                   1.49%
டாடா பவர்                             1.07%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  1.04%

இறக்கப் பங்குகள்

பவர் கிரிட் கார்ப்         -1.13
கெர்ய்ன் இந்தியா -0.90
பார்தி ஏர்டெல்         -0.87
ஐசிஐசிஐ பேங்க்         -0.80
என் எம் டி சி          -0.79

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ