Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முகேஷ் அம்பானியை முந்திய திலீப் சங்வி

முகேஷ் அம்பானியை முந்திய திலீப் சங்வி


இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளப்பட்டு திலீப் சங்வி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
திலிப் சங்வி (நிர்வாக இயக்குநர்) சன் பார்மா மற்றும் சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகளில் பெரும் பகுதியைத் தன்வசம் வைத்துள்ளார்.
மார்ச் 4-ம் தேதி  வர்த்தக நேரத்தில் சன் பார்மாவின் பங்குகள் 6.6 சதவிகிதமும், சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனியின் பங்குகள் 4.6 சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமானது.  இந்த இரண்டு பங்குகளும் நேற்றுமுன்தினம் புதிய உச்சத்தைத் தொட்டதும் கவனிக்கத்தக்கது. இதனால் இந்த நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அதிகரித்து நிறுவனத்தின் சொத்து மதிப்பும் அதிகரித்திருக்கிறது.
எனவே, இந்த நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனான  1.38 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி 1.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால் திலீப் சங்வி தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படுகிறார்.
சன் குழுமத்தின் சுஸ்லான் எனர்ஜி மற்றும் ரான்பாக்ஸி நிறுவனங்களின் கையகப்படுத்துதல் பணி முடிந்தால் திலீப் சங்வியின் சொத்து மதிப்பு இன்னும் 22,000 கோடி ரூபாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து 11% வளர்ந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் திலீப் சங்வியின் சொத்து 65% வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ