Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பு!

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பு!


இந்தியாவில் 18 – 64 வயதுள்ள 7000 மக்களிடம் மாஸ்டர் கார்டு ஆன்லைன் ஷாப்பிங் சர்வே எடுக்கப்பட்டது.
அதில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில்  100 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் விற்பனையில் 50 – 60 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் மொபைல் போன் மூலம் செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் மொபைல் போன்கள், சினிமா டிக்கெட்டுகள், ஆடைகள், விலை கொடுத்து வாங்கக்கூடிய பாடல்கள் போன்றவைகள் அதிகம் வாங்கப்படுகின்றன.
மொபைல் போன்கள்  என்கிற வசதியான கருவி இருப்பதால்தான் ஆன்லைன் ஷாப்பிங் இந்த அபரிமிதமான  வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த சர்வே மூலம் பாதுகாப்பான சேவை வழங்குவது மட்டுமின்றி, விலை குறைவு மற்றும் தரமான, வசதியான, வாடிக்கையாளர்களுக்கு தகுந்த மாதிரியான  கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். வசூலிக்கப்படும் விதமும் வாடிக்கையாளர்களுக்குத் தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் விகாஸ் வர்மா தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ