Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொலைத்தொடர்புத் துறை கடன் தொகை வெளியீடு!

தொலைத்தொடர்புத் துறை கடன் தொகை வெளியீடு!

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் தொலையளவு வெளியிடப்பட்டது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் அளவு 2,42,896 கோடி ரூபாய் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்திருக்கிறார்.  இந்தக் கடன் தொகை நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை  உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடன் தொகையில் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும்  எம்டிஎன்எல் நிறுவனங்களின் கடன் அளவு 18,579 கோடி ரூபாய் என்றும், இது மொத்த கடன் அளவில் 7.6% என்றும் எழுத்துப்பூர்வமாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மக்களவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்தத் தொகைகள் அரசாங்கத்தால் கணிக்கப்பட்டதல்ல, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டவை. இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பல நிறுவனங்களின் தொகைகள் இன்னும் சரியாக தணிக்கை செய்யப்படவில்லை.
இந்திய தொலைத்தொடர்புத் துறையில்  2000 – 2001ம் ஆண்டுகளில் 1,080 கோடி ரூபாயாக இருந்த அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2014 ஏப்ரல் – டிசம்பரில் மட்டும் 15,960 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை மொத்தமாக 1,00,980 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடாக பெறப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ