Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்........
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  604.17 புள்ளிகள் சரிந்து 28844.78  புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  தற்போது 181.00 புள்ளிகள் சரிந்து   8756.75 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இது சென்செக்ஸின் 28ஆவது மிகப்பெரிய சரிவாகும். நிஃப்டியின் நான்காவது மிகப்பெரிய சரிவாகும்.
 
10 கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் அதிகரித்து 26,089 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 3117 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.61 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
 
வர்த்தக நேர முடிவில்  இந்தியாவின் அனைத்து துறைகளும் 100 புள்ளிகளுக்கு அதிகம் சரிந்து வர்த்தகமானது. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்.எம்.சி.ஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் குறைவான இறக்கத்தை சந்தித்தது. ஹெல்த் கேர் துறை மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 984 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1884 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 105 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் ஆறு நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 44 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 4.91%
ஹெச் யூ எல் 3.86%
லுபின் 1.71%
டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ் 0.76%
என் எம் டி சி 0.27%
 
 
இறக்கப் பங்குகள்
 
சேச ஸ்டெர்லைட் -5.26%
ஹிண்டால்கோ -4.93%
பி ஹெச் இ எல் -4.35%
ஐசிஐசிஐ பேங்க் -4.30%
கெயில் -4.23%
 
11.30 மணி நிலவரம் 
ஏற்றம் காணாத இந்திய சந்தைகள்.......சென்செக்ஸ் 29039, நிஃப்டி 8808!
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  409.80 புள்ளிகள் குறைந்து 29039.15  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 129.45 புள்ளிகள் குறைந்து  8808.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.  இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.42  சதவிகிதமாக இருக்கிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 57 ரூபாய் அதிகரித்து 26,069  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2651 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2479 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 21 ரூபாய் அதிகரித்து 3,117 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.19  ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 5.80%
ஹெச் யூ எல் 1.89%
லுபின் 1.37%
பஜாஜ் ஆட்டோ 1.14%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.10%
 
இறக்கப் பங்குகள்
 
சேச ஸ்டெர்லைட் -4.12%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் -3.26%
ஆக்ஸிஸ் பேங்க் -3.23%
ஹிண்டால்கோ -3.07%
கோட்டக் மஹிந்திரா -2.75%
 
 

9.30 மணி நிலவரம் 

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 294.53 புள்ளிகள் குறைந்து 29154.42 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 95.25  புள்ளிகள் குறைந்து 8842.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1.03% இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
 
 10 கிராம் தங்கத்தின் விலை 472 ரூபாய் குறைந்து  26012 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 74 ரூபாய் குறைந்து 3138 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.69 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்திலிருந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 தற்போதைய நிலவரப்படி அனைத்து துறைகளும் இறக்கத்திலும், மந்த நிலையிலும் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஐ.டி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 6.98%
ஹெச் யூ எல் 0.98%
டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ்0.95%
லுபின் 0.62%
கோல் இந்தியா 0.11%
 
இறக்கப் பங்குகள்
 
டிசிஎஸ் -2.20%
ஹெச் டி எஃப் சி -2.03%
ஆக்ஸிஸ் பேங்க் -2.02%
டெக் மஹிந்திரா -2.01%
ஐசிஐசிஐ பேங்க் -1.74%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ