Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்...

3.30 மணி நிலவரம்

இரண்டாவது நாளாக சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 134.91 புள்ளிகள் குறைந்து 28709.87 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 44.70 புள்ளிகள் குறைந்து 8712.05 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 163 ரூபாய் குறைந்து 25,861 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 34 ரூபாய் குறைந்து 3129 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.62 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தக நேர முடிவில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஆட்டோமொபைல், மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, மூலதன பொருட்கள், எணெய் மற்றும் காஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1239 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1576 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 33 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

 

ஏற்றப் பங்குகள்

பார்தி ஏர்டெல் 7.03%

கோல் இந்தியா 3.83%

என் எம் டி சி 1.80%

எம் அண்ட் எம் 1.57%

ஜி என்டர்டெயின்மென்ட் 1.53%

 

 

இறக்கப் பங்குகள்

டி எல் எஃப் -4.24%

ஹெச் டி எஃப் சி -3.83%

ஜிண்டால் ஸ்டீல் -2.75%

ஹெச் யூ எல் -1.95%

ஹிண்டால்கோ -1.92%

 

1.30 மணி நிலவரம்

இறக்க நிலை மாறாத இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 36.69 புள்ளிகள் குறைந்து 28808.09 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 17.35 புள்ளிகள் குறைந்து 8739.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது

10 கிராம் தங்கத்தின் விலை 174 ரூபாய் குறைந்து 25,850 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 18 ரூபாய் குறைந்து 3,145 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.62 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஜகர்தா காம்போஸைட் 0.37% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்த பட்சமாக ஹேங்செங் 1047% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. பொதுவாக ஆசிய சந்தைகள் இன்று மந்த நிலையிலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள்!

பார்தி ஏர்டெல் 7.53%

கோல் இந்தியா 2.88%

லுபின் 1.63%

பஜாஜ் ஆட்டோ 1.57%

எம் அண்ட் எம் 1.52%

 

இறக்கப் பங்குகள்!

ஹெச் டி எஃப் சி -3.80%

டி எல் எஃப் -3.11%

கோட்டக் மஹிந்திரா -2.18%

ஹெச் யூ எல் -2.06%

கெயில் -1.76%

 

 11.30 மணி நிலவரம்

தேக்கம் தொடரும் இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 30.96 புள்ளிகள் அதிகரித்து 28875.74 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 7.75 புள்ளிகள் அதிகரித்து 8764.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.06 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 97 ரூபாய் குறைந்து 25,927 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2635 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2434 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் குறைந்து 3,161 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.72 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

ஏற்றப் பங்குகள்

பார்தி ஏர்டெல் 2.55%

கோல் இந்தியா 2.43%

எம் அண்ட் எம் 2.42%

பஜாஜ் ஆட்டோ 1.77%

இண்டஸ் இண்ட் 1.66%

 

இறக்கப் பங்குகள்

ஹெச் டி எஃப் சி -2.40%

கெயில் -1.78%

டி எல் எஃப் -1.72%

டி சி எஸ் -1.63%

ஹெச் யூ எல் -1.54%

 

 

9.30 மணி நிலவரம்

தேக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 10.85 புள்ளிகள் ஆதிகரித்து 28855.63 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.90  புள்ளிகள் குறைந்து 8755.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் சென்செக்ஸ்30000 புள்ளிகளையும், நிஃப்டி 9000 புள்ளிகள் என்கிற புதிய உச்சங்களை தொட்டது என்பது கவனிக்கத்தக்கது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் அதிகரித்து  26024 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து  3163 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.77 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
 தற்போதைய நிலவரப்படி மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ், எஃப்.எம்.சி.ஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 1.79%
சிப்லா 1.78%
கோல் இந்தியா 1.64%
எம் அண்ட் எம் 1.46%
பிபிசிஎல் 1.31%
 
இறக்கப் பங்குகள்
 
கெயில் -2.09%
ஹெச் டி எஃப் சி -1.90%
விப்ரோ -1.26%
ஹெச் யூ எல் -1.04%
கெர்ய்ன் இந்தியா -0.98%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close