Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் சிறு முதலீட்டாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டது...!

மியூச்சுவல் ஃபண்ட் சிறு முதலீட்டாளர்களுக்காகவே   உருவாக்கப்பட்டது...!
 
நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து 'வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற விழிப்புணர்வுக் கூட்டத்தை திருச்சியில் நடத்தியது.
 
 
இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஐசிஐசிஐ புரூடென்சியல் மியூச்சுவல் ஃபண்டின் ரீஜினல் ஹெட் ஹரீஷ், "முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃப்ண்ட் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது.  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சிட் ஃபண்ட் போன்று கிடையாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் முதலீடுகளை சரியாக கண்காணிக்க வேண்டும். உலகின் எட்டாவது அதிசயமான கூட்டு வட்டியின் மகிமையை புரிந்துக் கொண்டால் இளம் வயதிலே முதலீட்டை ஆரம்பித்துவிடுவீர்கள். நிலம் மற்றும் தங்கத்தில் மட்டும் முதலீடு செய்வதால் குறைவான லாபமே பெறமுடியும். முதலீட்டில் வெற்றியாளராக திகழ டைவர்சிபைஃடு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.
 
அடுத்ததாக பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், "பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் அதிகம் ஈடுபட வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் சிறு முதலீட்டாளர்களுக்காகவே அமைக்கப்பட்டது. நாம் முதலீடு செய்யும் முன் வயது, தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். வெற்றிகரமான முதலீட்டிற்கு இளம் வயதிலே பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் ஈடுபட வேண்டும். நீண்ட கால தேவைக்கு ஈக்விட்டி ஏற்றது. குறுகிய காலத்திற்கு லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். நம் முதலீடு, பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் போல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் மாதாந்திர முதலீட்டின் மகிமையை உணர முடியும்" என்றார்.
 
இறுதியாக பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, "நமது வாழ்க்கையை வளமாக்க சரியான நேரத்தில் நிதித் திட்டமிடல் அவசியம். நிம்மதியாக ஓய்வு பெற இளம் வயதிலேயே சிறு தொகையை பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில்  முதலீடு செய்து வர வேண்டும். " என்றார்.
மகளிர் தினத்தன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான முதலீட்டாளர்கள் பங்குபெற்றது, அன்று (மார்ச் 8) மகளிர் தினமா? முதலீட்டு தினமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் திருச்சிவாசிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
- இரா.த.சசிபிரியா, 
படங்கள் : தே. தீட்ஷித்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ