Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களின் மொத்த விற்பனை சரிவு!

இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கமாடிட்டி எக்ஸ்சேஞ்களின் டேர்னோவர் 41% சரிந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டாதது தான் டேர்ன் ஓவரின் சரிவிற்கு காரணம் என்று எஃப்.எம்.சி தெரிவித்திருக்கிறது.
 
இந்த நிதி ஆண்டில் 56.43 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் கமாடிட்டி வர்த்தகம் நடந்திருப்பதாகவும். இதே காலகட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் 95.13 லட்சம் கோடி ருபாய் வரை கமாடிட்டி வர்த்தகம் நடைபெற்றதாகவும் எஃப்.எம்.சி தெரிவித்திருக்கிறது.
 
அதிகபட்சமாக புல்லியன் (தங்கம் மற்றும் வெள்ளி) 51 % டேர்ன் ஓவரில் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் – பிப்ரவரி வரை 20.05 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது.
 
இதே கால கட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் 40.83 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி இருந்தது கவனிக்கத் தக்கது.   
 
அதனைத் தொடர்ந்து எனர்ஜி, மெட்டல், அக்ரி கமாடிட்டி போன்றவைகள் சரிவை சந்தித்திருக்கின்றன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ