Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்..

 

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்..

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 273.94 புள்ளிகள் அதிகரித்து 28933.11 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 76.55 புள்ளிகள்ஆதிகரித்து 8776.50 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 25,765 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 44 ரூபாய் அதிகரித்து 3044 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.59 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தக நேர முடிவில் இந்திய சந்தைகளின் அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1636 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1226 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 142 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 37 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 13 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

 

ஏற்றப் பங்குகள்

கெர்ய்ன் இந்தியா 4.56%

சேச ஸ்டெர்லைட் 4.10%

என் டி பி சி 3.87%

ஹிண்டால்கோ 3.49%

டி எல் எஃப் 3.03%

இறக்கப் பங்குகள்

டெக் மஹிந்திரா -2.21%

எம் அண்ட் எம் -1.52%

கோல் இந்தியா -1.25%

பஜாஜ் ஆட்டோ -1.22%

டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ்-1.01%

 

11:30 மணி நிலவரம்:

திடீர் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 208.68 புள்ளிகள் அதிகரித்து 28867.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 63.75 புள்ளிகள் அதிகரித்து 8763.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.73 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் குறைந்து 25,671 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2608 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2438 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 3,035 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

ஏற்றப் பங்குகள்

என் டி பி சி 5.63%

டாடா ஸ்டீல் 2.87%

கெர்ய்ன் இந்தியா 2.71%

அம்புஜா சிமென்ட்ஸ் 2.56%

ஜிண்டால் ஸ்டீல் 2.44%

இறக்கப் பங்குகள்

எம் அண்ட் எம் -1.20

டெக் மஹிந்திரா -1.16

ஹெச் யூ எல் -0.94

விப்ரோ -0.90

பஜாஜ் ஆட்டோ -0.68

 

9.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 155.44 புள்ளிகள் அதிகரித்து 28820.22 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 48.40 புள்ளிகள் அதிகரித்து 8748.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 234 ரூபாய் குறைந்து 25,685 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 61 ரூபாய் குறைந்து 3000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.74 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போது பொதுவாக அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. தற்போதைய நிலவரப்படி வங்கி, மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்:

சேச ஸ்டெர்லைட் 1.95%

ஜிண்டால் ஸ்டீல் 1.78%

பி என் பி 1.78%

அம்புஜா சிமென்ட்ஸ் 1.71%

என் டி பி சி 1.63%

இறக்கப் பங்குகள்:

விப்ரோ -0.87%

எம் அண்ட் எம் -0.75%

டெக் மஹிந்திரா -0.70%

பஜாஜ் ஆடோ -0.37%

லுபின் 0.18%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ