Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் சந்தைகள்

 
10.00 மணி நிலவரம்                                                                         

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.02 புள்ளிகள் அதிகரித்து 29039.43 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.40  புள்ளிகள் அதிகரித்து 8802.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்குவது இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகும். அதுமட்டுமின்றி இன்று இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் எனவே, சந்தைகள் ஏற்றத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம்.

10 கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து  25,655 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 18 ரூபாய் குறைந்து  2982 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.56 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

 தற்போதைய நிலவரப்படி வங்கி, மூலதன பொருட்கள், ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஐ.டி, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும்  வர்த்தகமாகின்றன. 

ஏற்றப் பங்குகள்

ஹெச் டி எஃப் சி                              2.15%

ஐசிஐசிஐ பேங்க்                              1.89%

ஐ டி எஃப் சி                                      1.09%

ஓ என் ஜி சி                                         0.83%

சிப்லா                                                  0.82%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல்             -1.75%    

சன் பார்மா                         -1.29%

ஹிண்டால்கோ              -0.93%                                          

பிபிசிஎல்                            -0.87%

ஹெச்சிஎல் டெக்             -0.86%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ