Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: புதிய செயல் இயக்குநர் கிஷோர் பி காரத்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநராக கிஷோர் பி காரத் மும்பையில் பொறுப்பேற்றிருக்கிறார். இவர்  வணிகம் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். இவர் கடந்த 37 வருடங்களாக பேங்க் ஆஃப் பரோடாவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

இவர் பேங்க் ஆஃப் பரோடாவில் க்ரெடிட் துறையில் பணி புரிந்திருக்கிறார். பொது மேலாளராக சி.எஃப்.ஹெச் ஃபைனான்சியல் இன்க்ளூசியன் மற்றும் பிரதமரின் ஜன் தன் யோஜனாவிற்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
 
இவர் உலகின் பல பகுதிகளில் பணி புரிந்த அனுபவமுள்ளவர். இந்தியாவில் மும்பை, புனே, கோவா போன்ற பகுதிகளிலும், வெளிநாட்டில் ஷார்ஜா, ஐக்கிய அரபு நாடுகள், போர்ட் ஆஃப் ஸ்பெயின், ட்ரினிதத் மற்றும் தொபாகோ போன்ற பகுதிகளில் பல தலைமைப் பணிகளில் பொறுப்பு வகித்திருக்கிறார்.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP