Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிக்கி 15 வருட புதிய உச்சம்

 

நிக்கி 200 குறியீடு தன் 15 வருட அதிகபட்ச இன்ட்ரா டே உச்சத்தை தொட்டிருக்கிறது. இதில் நிதி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகபட்சமாக  உயர்ந்து வர்த்தகமாகி இருக்கிறது. 
நிக்கி பங்குகளின் சராசரி 0.3% அதிகரித்து 19,3.9.23 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. இதே வளர்ச்சி அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் ஹேன்சன் என்னும் அனலிஸ்ட் கணித்திருக்கிறார்.
 
டோக்கியோ பங்குச் சந்தையில் நிதி நிறுவனங்களின் பங்குகள் 1.06% உயர்ந்து வர்த்தகமானது. இதில் முட்ஷிபிஷி யூ.எஃப்.ஜே ஃபைனான்ஷியல் குரூப் பங்குகள் இரன்டு சதவிகிதமும், சுமிடொமொ மிட்சுயீ ஃபைனான்ஷியல் குரூப் பங்குகள் 2.03% உயர்ந்து வர்த்தகமானது.
 
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தன் நவம்பர் மாத உச்சத்தை கடந்து தற்போது புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இது கடந்த  14 மாதங்களில் புதிய உச்சமாகும். இதில் முட்ஷிபிஷி எஸ்டேட் 1.4 சதவிகிதமும், மிட்சொய் ஃபுடோசன் 1.2சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமாகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ