Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய பங்குகளை வெளியிட முடிவு

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் கடந்த வருடங்களில் லாபம் பார்த்து வரும் விமான சேவை நிறுவனமான இண்டிகோ ரூபாய் 2,500 கோடிக்கு புதிய பங்குகளை வரும் 2015 ஏப்ரல் - ஜீன் காலாண்டில் வெளியிட உள்ளது. 

 
இந்தியாவில் உள்ள மற்ற தனியார் விமான சேவை நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்கே பாடுபட்டுக் கொண்டிருப்பது நமக்கு தெரிந்ததே. அதே போல் கிங்ஃபிஸ்ஸர் ஏர்லைன்ஸை மீட்பதற்கு அதன் நிறுவனரான மல்லையாவோ, மற்ற முதலீட்டாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கிங்ஃபைஸ்ஸர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கி கிட்டதட்ட மூன்று வருடம் நிறைவடையப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இவ்வளவு ஏன் இந்திய அரசு இயக்கும் ஏர் இந்தியா கூட ஆட்கள் பற்றாக்குறை, சம்பளம் தருவதில் சிக்கல் என சில பிரச்னைகளால் சரிவர இயங்க முடியாமல் இருப்பதும் நாம் அறிந்ததே. இப்படி ஒரு காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட்டு  தன்னை விரிவாக்கிக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close