Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருத்தி ஏற்றுமதிக்கு கூடுதல் கட்டணம் விதிக்க யோசனை....

ஜவுளித்துறை அமைச்சகம் பருத்தியை ஏற்றுமதி செய்வதில் ஒரு அளவை நிர்ணயிக்க இருக்கிறது. அந்த வரம்பிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பருத்திக்கு 10 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் யோசனை கூறி இருக்கிறது. உள்நாட்டில் உள்ளவர்களுக்கு (பருத்தி பயன்படுத்துபவர்களுக்கு) தேவையான அளவு முழுவதும் கிடைப்பதை உறுதி செய்யத்தான் இந்த யோசனை என்று விளக்கம் அளித்திருக்கிறது. 
 
இந்த யோசனையை வணிக விவகார அமைச்சகம் ஏற்கவில்லை. இந்த கூடுதல் கட்டணம் பற்றி ஜவுளித் துறை அமைச்சகத்திற்க்கும், வணிக விவகார அமைச்சகத்திற்கும் இடையில்  பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்தியாவில் பருத்தி குஜராத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP