Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டு இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு

 
இந்தியாவின் விவசாய பொருட்கள் உற்பத்தியில் மாட்டு இறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு சமமாக பிரேசில் அதிக மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது. 
 
தற்போது இந்தியாவில் அதிக மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் மாநிலமான மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்திருப்பதால் மாட்டு இறைச்சியின் ஏற்றுமதி அளவு குறைய வாய்ப்பிருக்கிறது.
 
அதே போல் பிரேசிலின் பணமதிப்பு இந்தியாவைக் காட்டிலும் அதிகம் சரிந்திருக்கிறது. எனவே உலக மாட்டு இறைச்சி வாடிக்கையாளர்களின் கவனம் பிரேசிலின் பக்கம் திரும்பி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.05 சதவிகிதம் மட்டும் குறைந்திருக்கிறது. ஆனால் பிரேசிலின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 34.8 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்திருக்கிறது. 
 
இதனால்  இந்தியாவிற்கு வரும் அந்நிய செலாவணி குறைய வாய்ப்பிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் (2013 - 2014) மட்டும் மாட்டு இறைச்சி ஏற்றுமதியால்  4,350.35 மில்லியன் டாலர் அந்நிய செலாவணி கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ