Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காப்பீட்டு முகவர்கள் தவறு செய்தால் நிறுவனங்களுக்கு ரூ.1கோடி அபராதம்!

காப்பீட்டு நிறுவன முகவர்கள் தவறு செய்தால் அந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என காப்பீட்டு கண்காணிப்பு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

முகவர்கள் நியமனம் மற்றும் அவர்களது கண்காணிப்பு குறித்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ஐ.ஆர்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

அதில், ''காப்பீட்டு முகவர்கள் செய்யும் முறைகேடுகள் மற்றும் தவறுகளுக்கு அவர்கள் சார்ந்த காப்பீட்டு நிறுவனமே பொறுப்பாகும். எனவே, முகவர்கள் செய்த தவறுகள் நிரூபிக்கப்பட்டால், அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், முகவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒரு முகவர், ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு பொதுக்காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். வேறு நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்படவும் தடை விதிக்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ