Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்பாராத இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்....

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  152.45 புள்ளிகள் குறைந்து 28469.67 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 51.25  புள்ளிகள் குறைந்து 8634.65 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.56 சதவிகிதமாக இருந்தது.

10 கிராம் தங்கத்தின் விலை 250  ரூபாய் அதிகரித்து 25,887 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 57  ரூபாய் அதிகரித்து  2,881 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

பகல் 1.30 மணி அளவில்  ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த  அனைத்து துறைகளும் தற்போது இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய இரண்டு துறை மட்டும் தான் வர்த்தக நேர முடிவில் ஏற்றாத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1112 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1718 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 131 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 13 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 36 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

லுபின்          2.58%

ஏசியன் பெயின்ட்ஸ் 2.53%

கெயில் 2.13%

டாடா ஸ்டீல் 1.46%

டி சி எஸ்         1.44%

இறக்கப் பங்குகள்

பி என் பி                -3.92%

பேங்க் ஆஃப் பரொடா -3.16%

ஆக்ஸிஸ் பேங்க் -3.05%

பி பி சி எல்                 -2.47%

 

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 199.27 புள்ளிகள் அதிகரித்து 28821.39  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 54.65  புள்ளிகள் அதிகரித்து 8740.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 233 அதிகரித்து  25,870 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா என்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 52 ரூபாய் அதிகரித்து 2876 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.49 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஹெல்த் கேர், மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 

ஏற்றப் பங்குகள்

லுபின்                3.60%

ஏசியன் பெயின்ட்ஸ் 3.49%

டாடா ஸ்டீல்         3.18%

சன் பார்மா                 2.40%

கெயில்          2.15%

இறக்கப் பங்குகள்

பி என் பி       -1.66%

டெக் மஹிந்திரா -1.44%

பி பி சி எல்         -1.29%

ஹெச்சிஎல் டெக் -1.17%

பேங்க் ஆஃப் பரோடா -0.91%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 248.45 புள்ளிகள் அதிகரித்து 28870.57 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 65.75 புள்ளிகள் அதிகரித்து 8751.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்றவிகிதம் 0.81 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 279 ரூபாய் அதிகரித்து 25,916 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2627 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2466 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 59  ரூபாய் அதிகரித்து  2,883 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.41 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்

லுபின்                3.23%

ஏசியன் பெயின்ட்ஸ் 2.67%

சன் பார்மா                  2.47%

டாடா ஸ்டீல்          2.41%

கெயில்                 2.28%

இறக்கப் பங்குகள்

ஹெசிஎல் டெக்      -2.66%

டெக் மஹிந்திரா               -1.45%

ஜி என்டர்டெயின்மென்ட்-0.66%

பேங்க் ஆஃப் பரொடா     -0.55%

 

 

10.00 மணி நிலவரம்                                                                         

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...

 

இன்றைய நாளின் துகக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து 28940 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 92 புள்ளிகள் அதிகரித்து 8778  புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது

 

10 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து  25,637 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 61 ரூபாய் குறைந்து  2,824 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.39 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது

 

அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின்  இரண்டு நாள் கூட்டத்தின் முடிவுகள் வெளியான நிலையில் தற்போது உள்ள சூழலில் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற முடிவு சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 607 பங்குகள் விலை அதிகரித்தும். 102 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.

 

ஏற்றப் பங்குகள்

 நிறுவனம்                                             விலை         %

 

கெயில்

394.05

3.22

ஏசியன் பெயிண்ட்ஸ்

837.95

2.92

சன் பார்மா

1,068.50

2.30

எல் & டி

1,737.65

2.27

ஆக்ஸிஸ் பேங்க்

593.90

2.18

 

 

இறக்கப் பங்குகள்

  நிறுவனம்                                             விலை         %

 

என்டிபிசி

151.50

-0.75

ஹச் சி எல் டெக்

998.10

-0.52

டெக் மஹிந்த்ரா

699.00

-0.16

பேங்க் ஆஃப் பரோடா

182.15

-0.05

ஜின்டால் ஸ்டீல்

175.10

-0.03

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ