Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐனாக்ஸ் விண்ட் பங்கு வெளியீடு

 

காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனமான ஐனாக்ஸ் விண்ட் 1,025 கோடி ரூபாய்க்கு தொடக்க பங்குகளை வெளியிட்டுள்ளது. மார்ச் 17 முதல் மார்ச் 20 வரை இந்த பங்குகளை வாங்கலாம். இந்த வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச், எடல்வீஸ் கேப்பிட்டல் மற்றும் யெஸ் பேங்க் ஆகிய முதலீட்டு வங்கிகள் நிர்வகிக்கின்றன.
 
ஐனாக்ஸ் விண்ட் ஒரு  பங்குக்கு 315 - 325 ரூபாய் வரை விலை நிர்ணயித்து  விற்பனை செய்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு 15 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் பங்குகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 3.15 கோடி பங்குகளை வெளியிட்டிருக்கிறது. இந்த பங்கு வெளியீடுகள் மூலம் தன்  செயல்பாட்டு மூலதனத்தை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறது.
 
கடந்த 2012 டிசம்பரில் பார்தி இன்ஃப்ராடெல் 4,155 கோடி ரூபாய்க்கு ஐபிஓக்களை வெளியிட்டது. அதற்குப் பிறகு ஐனாக்ஸ் விண்ட் வெளியிட்டுள்ள இந்த ஐபிஓ தான் 2012க்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள ஐபிஓக்களில் இரன்டாவது மிகப்பெரிய ஐபிஓவாக கருதப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ