Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர் இந்தியா விமானிகளுக்கு நோட்டீஸ்

 பயணிகள் விமான போக்குவரத்து இயக்குநரக ((டிஜிசிஏ) அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் நடத்திய திடீர் சோதனையில் ஏர் இந்தியா விமான ஓட்டிகளில் பலர் தாமதமாக வருவதாகவும், இதனால் விமான பயணம் தாமதப்படுத்தப் படுவதாகவும் தெரிந்திருக்கிறது. 

பொதுவாக விமானிகள் விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே விமானத்தில் இருக்க வேண்டும் அப்போது தான் ப்ரீ ஃப்லைட் ப்ரீஃபிங், ப்ரீத் அனலைசிங், ஏர்க்ராஃப்ட் இன்ஸ்பெக்சன், ப்ரீ ஃப்லைட் டிபார்ச்சர் செக் போன்ற பாதுகாப்பு பரிசோதனைகளை செய்து முடித்து விமானம் புறப்பட தயாராகும். ஆனால் விமானிகள் 20 - 30 நிமிடங்களுக்கு முன் தான் விமானத்திற்கு வருவதாக டிஜிசிஏ அதிகாரிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
 
இதனால் ஏர் இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டு டிஜிசிஏ நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிஸிக்கு பதில் அளிக்கவில்லை என்றால் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது டிஜிசிஏ.
 
விமான செயல்பாடுகள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்துவதில் ஏர் இந்தியா தான் கடைசி இடத்தில் இருக்கிறது. ஏர் இந்தியா குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுவதில் வெறும் 52% தான் இருக்கிறது. இனியும் விமானிகள் தாமதமாக வந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று டிஜிசிஏ தெரிவித்திருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ