Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சா எண்ணெய் இருப்பை அதிகரிக்க திட்டம்

 இந்தியா மூலோபாய பெட்ரோல் இருப்பை அதிகரிக்க முதல் தவணையாக எண்ணெய் இறக்குமதிக்கு ஈராக்குடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போது நிலவும் கச்சா எண்ணெய் விலை குறைவை பயன்படுத்தி எண்ணெய் இருப்பை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

ஈராக்கிற்க்கு தற்போது வேறு எந்த பெரிய நிறுவனமும், நாடும் தன் பஸ்ரா என்ணெய் வயலின் கச்சா எண்ணெயை வாங்க முன் வராத போது, இந்தியா முன் வந்திருப்பதை வரவேற்றிருக்கிறது. இந்திய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் இந்த எண்ணெய் இருப்பிற்காக கச்சா எண்ணெயை வாங்க ஈராக்கில் உள்ள பஸ்ரா எண்ணெய் வயலிற்கு டெண்டர் வழங்க உள்ளது. இந்திய நிதி அமைச்சகம் இந்த முதல் எண்ணெய் இருப்பிற்கான கச்சா எண்ணெயை வாங்க  2,400 கோடி ரூபாய் (383 மில்லியன் டாலர்) வழங்கி இருக்கிறது.
 
இப்படி சேமித்து வைக்கப்படும் எண்ணெய் சப்ளை பற்றாக்குறை, கச்சா எண்ணெய் அதிக விலை ஏற்றம் காணுதல், கச்சா எண்ணெயின் விலை அதிக ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும் போது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ