Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலிவு விலை போன்களை தயாரிக்க திட்டம்...டேட்டா விண்ட்

 ஆகாஷ் டேப்ளட்டை உருவாக்கிய டேட்டா விண்ட் நிறுவனம் தற்போது குறைந்த விலையில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட்களை  இன்னும் 90 நாட்களில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.

இதற்காக மின்சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களோடு கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) வைத்தும் பணிபுரிய தயாராகி வருகிறது.  அடுத்த ஒரு வருடத்தில்  இந்த குறைந்த விலை போன்கள் மற்றும் டேப்ளட் உற்பத்தியினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் டேட்ட விண்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2015 - 2016 மத்திய அரசின் பட்ஜட்டில் இந்தியாவில் உற்பத்தி செய்தால் இறக்குமதி, கலால், சுங்க வரிகளில் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது. எனவே தான் இந்த நிறுவனம் இந்தியாவில் போன்களையும் டேப்ளட்களையும் தயாரிக்க ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது.
அது மட்டுமின்றி மாநில அரசுகள் வசூலிக்கும் விற்பனை வரியை எந்த மாநிலம் குறைத்துக் கொள்ளும் அல்லது சலுகை தரும் என்பதையும் ஆராய்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. டெல்லியில் ஐந்து சதவிகிதம் விற்பனை வரி வசூலிப்பதால் பல உற்பத்தியாளர்களுக்கு டெல்லி விருப்பமான தேர்வாக இருக்கிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ