Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா 2015: டிஜிட்டல் வர்த்தகம் ஒரு லட்சம் கோடி!

இந்தியாவில் இணையதள சேவைகள் அதிகரித்து வருவதாலும், இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை உயர்ந்து வருவதாலும் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் டிஜிட்டல் வர்த்தக மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று என்ஐஎம்ஏஐ மற்றும் ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் சந்தை மதிப்பு 53% உயர்ந்து 81,525 கோடி ரூபாயாக காணப்பட்டது. இது மேலும் 33% வளர்ச்சியடையும் என்கிற எதிர்பார்ப்பு நடப்பு ஆண்டில் நிலவி வருவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  முக்கியமாக தற்போது இணையதளத்தில் பயண டிக்கெட்டுகள் வாங்குவதன்மூலம் ரூ, 50,050 கோடி அளவுக்கும், மொபைல் போன்கள் மற்றும் மொபைல் சார்ந்த பொருட்களின் வர்த்தக மதிப்பு 9,936 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இது தவிர நுகர்வோர் பயன்பாடு சார்ந்த சமையலறை சாதனங்கள் 3,404 கோடிக்கும், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்கள் 2,780 கோடி, புத்தகங்கள் 648 கோடி, பர்னிச்சர்கள் 1,059 கோடி, சினிமா டிக்கெட்டுகள், உணவு மற்றும் மளிகை பொருட்கள் 2,025 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளன. ஆன்லைன் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் 45% மக்கள் பொருட்களை வாங்கியபின் பணம் கட்டும் `கேஷ் ஆன் டெலிவரி’ முறையிலும், 21! பேர் டெபிட் கார்டு மூலமும், 16% பேர் கிரெடிட் கார்டு மூலமும், 10% பேர் நெட்பேங்கிங் வழியாகவும் வர்த்தகம் செய்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இது தவிர கேஷ் கார்டு மூலமும் 8 சதவீத மக்கள் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ