Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் கால்பதித்த புதிய சூப்பர் பைக் நிறுவனம்.....

 இத்தாலியின் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பெனல்லி இந்தியாவில் கால்பதித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலை 2.83 லட்சம் ரூபாயிலிருந்து 11.81 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. அதே போல் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் 300சிசி முதல் 1130 சிசி வரை ஐந்து மாடல்களில் கிடைக்கிறது.

 தற்போது இந்தியாவில் குறிப்பாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் இருசக்கர வாகனங்கள் முன்னிலையில் இருக்கிறது. ஹோண்டா, யமஹா, காவசாகி, சுஸீகி, ட்ரையம்ப், அப்ரில்லா, ஹார்லே, டேவிட்சன், கேடிஎம், டுகாட்டி மற்றும் ஹ்யோசங் போன்ற பிராண்டுகளோடு பெனல்லி போட்டி போட இருக்கிறது.
 
இத்தாலியில் பெசரோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெனல்லி நிறுவனம் 100 ஆண்டுகள் பழமையான நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் புனேவில்  உள்ள  டி.எஸ்.கே என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டி.எஸ்கே நிறுவனம் பெனல்லி பைக்குகளின் பாகங்களை ஒன்றிணைத்தல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளை கவனித்துக் கொள்கிறது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close