Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை முதலீடு: நஷ்டம் என்றாலே பயம்!

பங்குச் சந்தை முதலீடு:
 நஷ்டம் என்றாலே பயம்!

 
பொதுவாகவே எந்தவகை முதலீடாக இருந்தாலும், முதலீட்டாளர்களின் உணர்ச்சி பிரதிபலிப்பினை வைத்து லாபம் நஷ்டம் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் ஒருவகையில் உண்மை. பங்குச் சந்தை முதலீட்டைப்
பொறுத்தவரை, முதலீட்டாளரின் உணர்ச்சி பிரதிபலிப்பானது                          - எஸ்.ஆனந்த்
லாப நஷ்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பங்குச் சந்தை முதலீட்டில், திரையில் தொடர்ந்து காண்பிக்கப்படும் ஏற்ற இறக்கத்தைப் பார்த்து, பெரும்பாலான முதலீட்டாளர்கள் நமக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். இப்படி இழப்பைக் குறித்து பயப்படும் மனநிலையே, ஒரு முதலீட்டாளருக்கு இழப்பை ஏற்படுத்திவிடுகிறது. 

ரியல் எஸ்டேட்டின் விலை ஏற்ற இறக்கத்தை தினசரி நாம் திரைகளில் பார்க்க முடியாது. அதனால் அந்தத் துறையில் முதலீடு தொடர்பான அச்சம் குறைவாக உள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் மத்தியில், பங்குகளில் முதலீடு செய்வதை விட, எங்கோ கண்காணாத இடத்தில் நிலம் வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் பங்குச் சந்தை முதலீடு அப்படி அல்ல. ஒவ்வொரு மணித்துளியிலும் ஏற்ற இறக்கத்தை துல்லியமாகப் பார்க்க முடிகிறது. அதுவே பயம் உருவாக காரணம்; பயம் என்பது இழப்பு ஏற்படுவதற்கு காரணம் ஆகிறது. பயம்  பதற்றத்தை ஏற்படுத்துகிறது. பதற்றம் ஏற்படுகிறபோது, இழப்பு வருவதற்கு முன்பே, வந்துவிடும் என்ற  அச்சுறுத்தல் மனதுக்குள் ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது.

உண்மையான இழப்பைவிட மனதினால் மிகைப்படுத்தப்படும் கற்பனையான  இந்த இழப்பானது, பதற்றத்தை  இன்னும் அதிகமாக்குகிறது. இத்தகைய சார்பு மனப்பான்மையால் டிஸ்பொசிஷன் (Dis-Position) என்கிற நீண்ட காலத்தில் லாபம் தரக்கூடிய பங்குகளை,  விலையில் சிறிய இறக்கம் வந்தாலும் உடனே விற்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றும். இதுவே நாளடைவில் பங்கு சந்தை என்றாலே இழப்புதான் என்ற கண்ணோட்டத்தை முதலீட்டாளர்கள் மனதில் ஏற்படுத்துகிறது. இதனால் சில்லரை முதலீட்டாளர்கள் பலர் பயத்தினால், லாபம் தரக்கூடிய பங்குகளை, பெரிய அளவிலான  லாபத்துக்கு காத்திராமல் குறுகிய காலத்திலேயே குறைந்த லாபத்தில் விற்று விடுகிறார்கள்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் 1987-ல் இருந்து 1993 வரையிலான காலகட்டத்தில் அதிக வர்த்தகத்தில் ஈடுபட்ட 10,000 சில்லரை முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகளை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய பங்குகளை இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் குறைந்த லாபத்துக்கோ அல்லது நஷ்டத்துக்கோ விற்றுவிடுகிறாற்கள் என்று தெரிய வந்தது. எனினும் இழப்பு ஏற்படுத்தும் பங்குகள் தொடர்ந்து பணத்தை இழக்கச் செய்தும், லாபம் தரும் பங்குகள் தொடர்ந்து லாபம் தருபவையாக இருப்பதும் தெரிய வந்தது.  சில்லரை முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் சம்பாதிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இங்கு என்னுடைய நண்பரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2013 -ம் ஆண்டு ஜூலையில்  200 சின்டெக்ஸ் பங்குகளை  பங்கு விலை  38 ரூபாய்க்கு வாங்கினார். அது செப்டம்பர் 2014-ல்  17  ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது.  வீழ்ச்சி ஏற்படுத்திய பதற்றத்தினால் அவர் அந்த பங்குகளை விற்றுவிட போவதாக கூறினார். நான் அந்த வீழ்ச்சி தற்காலிகமானதே என்று விளக்கினேன். ஏப்ரல் 2014-ல் பங்கின் விலை உயர்ந்து 45 ரூபாயை  எட்டியது. ஒரு வருட காலம் தக்க வைத்து இருந்த பங்குகளை 7 ரூபாய் லாபத்தில் விற்றுவிட்டார். ஆனால் அதன் தற்போதைய மதிப்பு ரூபாய் 132. அந்த நண்பர் அடைந்திருக்க வேண்டிய  94 ரூபாய் லாபத்தை இழந்தார். இதுபோக டிவிடெண்ட் வேறு இருக்கிறது.

அதே நண்பர் 2008-09 ல் சில இன்ஃப்ரா துறை பங்குகளில் முதலீடு செய்திருந்தார்.அவை, ஜேபி அசோசியேட்ஸ், ஐவிஆர்சிஎல் மற்றும் ஜிஎம்ஆர் இன்ஃப்ரா. இவை  வாங்கிய விலையில் இருந்து இன்று 85% வீழ்ச்சியில் உள்ளன. அவர் இப்பங்குகளை 2014-ல் விற்று சின்டெக்ஸ்-ல் முதலீடு செய்திருந்தால் (ரூபாய் 45-க்கு வாங்கியிருந்தால்) இன்று அதிகமான லாபத்தை அடைந்திருப்பார். இந்த மாதிரியான பிழைகளினால் முதலீட்டாளர் மனதில் பங்கு வர்த்தகம் என்றாலே இழப்பு என்கிற பயம் ஏற்பட்டுவிடுகிறது.

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை பயம், பதற்றத்தைத் தவிர்த்து நிதானமான  போக்கை கடைப்பிடித்தால் லாபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்! 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ