Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்டலூன்ஸ் நிறுவனத்துடன் ஆதித்யா பிர்லா ரீடெயில் லிமிடெட் இணைக்க திட்டம்

ஆதித்யா பிர்லா ரீடெயில் லிமிடெட் இன் கீழ்  தொடர் சங்கிலி சூப்பர் மார்கெட் நிறுவனமான மோர் ஃபார் யூ மற்றும் மதுரா ஃபேஷன் அண்ட் லைஃப் ஸ்டைல் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பன்டலூன்ஸ் ஃபேஷன் அண்ட் ரீடெயில் நிறுவனத்தோடு இணைக்கப்பப்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேற்கூறிய மூன்று நிறுவனங்களில் பன்டலூன்ஸ் ஃபேஷன் அண்ட் ரீடெயில் மட்டும் தான் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த இரண்டு நிறுவனத்தையும் இணைக்கும் போது இந்த மூன்று நிறுவனத்திற்கும் அதிக நஷ்டங்கள் இருப்பதால் வரி சலுகைகள் கிடைக்கும்.
 
பிர்லா குழுமத்திடம் பன்டலூன்ஸின் 72.62 சதவிகித பங்குகள் இருக்கிறது. 2012ல் தான் ஃப்யூச்சர் நிறுவனத்திடமிருந்து பன்டலூன்ஸ் நிறுவனம் பிர்லா குழுமத்தால் 1,600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. இந்த இணைத்தல் நடவடிக்கைக்கு பின் அதன் பங்குகளை விற்று  50 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) அளவுக்கு முதல் திரட்ட பிர்லா குழுமம் திட்டமிட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close