Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டோமொபைலில் அசுர வேகத்தில் முன்னேறும் குஜராத்......

குஜராத்தில் உள்ள சனந்த்  தொழிற் பூங்கா நானோ நகரமாக, இன்று உலகம் அறிந்த ஒரு கிராமமாக இருக்கிறது. தற்போது இந்த வரிசையில் பெசராஜி மற்றும் ஹலோல் ஆகிய கிராமங்களும் இணைகிறது. இந்த இரண்டு கிராமங்களும் குஜராத்தில் தான் இருக்கிறது.


மாருதி சுஸீகி இந்தியா, ஃபோர்ட் இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்த சனந்த் - பெசராஜி - ஹலோல் கிராமங்களில் மட்டும் 21,200 கோடி ரூபாய் முதலீடாக செய்திருக்கிறது. இந்த உற்பத்தி ஆலைகள் முழுமையாக செயல்படத் தொடங்கினால் ஆண்டு ஒன்றுக்கு 71,60,000 வாகனங்கள் இந்த மூன்று கிராமத்திலிருந்து இந்தியா உட்பட உலகம் முழுக்க விற்பனைக்கு அனுப்பப்படும்.

இது ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிக வாகனங்களை உற்பத்தி செய்யும், விரல்விட்டு எண்ணக்கூடிய இடமாக இந்தியா கருதப்படும். வரும் காலங்களில் இந்தியா ஆட்டோமொபைல்களின் மிகப் பெரிய உற்பத்திச் சாலையாகவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹப்பாகவும் கருதப்படும். உலக அளவில் இடம் பிடிக்கப் போகிறது என்றால் இந்திய அளவில் சொல்லவா வேண்டும். ஆட்டோமொபைலில் இனி குஜராத் தான் நம்பர் ஒன்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ