Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக கடனில் மத்திய அரசு......

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்தியஅரசு ஆகியவைகளில் மத்திய அரசுக்கு அதிக கடன் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் (அனைத்து மாநில அரசு வாங்கி இருக்கும் கடன்) அடுத்தடுத்த இடங்கள் கிடைத்திருக்கிறது.

2014 நிதி ஆன்டின் கணக்கு படி மத்திய அரசுக்கு 57.79 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. 2004 நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 18.75 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2014 நிதியாண்டில் 35.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது.  2004ல் வெறும் 3.89 லட்சம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. 2014 நிதி ஆண்டு நிலவரப்படி மாநில அரசுகளுக்கு 24.68 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருக்கிறது. 2004ல் 9.19 லட்சம் கோடி ரூபாய் தான் கடனாக இருந்தது.

இந்திய நிறுவனங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அதிக அளவில் கடன் வாங்கி இருக்கிறது. ஆண்டு கூட்டுவட்டி விகிதப்படி பார்த்தால்  இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுக்கு 24.8 சதவிகிதம் அதிகம் கடன் வாங்கி இருக்கிறது. இதே ஆண்டு கூட்டு வட்டி விகிதப்படி பார்த்தால் மத்திய அரசு வருடத்திற்கு 11.4 சதவிகிதம்  கூடுதல் கடன் வாங்கி இருக்கிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் வாங்கி இருக்கும் கடனை விட இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் 10 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP