Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று நிறுவனங்களுக்குத் தடை செபி அதிரடி...

எவர்லைட் ரியல்கான் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Everlight Realcon Infrastructure Limited),  டிரஸ்டி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (Tresty Securities Limited), ரியல் விஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Realvision International Limited) போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையின் விதிமுறைகளை மீறி மக்களிடமிருந்து பணம் திரட்டியதால் செபி இந்த நிறுவனங்களை தடை செய்துள்ளது.  இந்த மூன்று நிறுவனங்களும் 12,000 முதலீட்டாளர்களை ஏமாற்றி 29 கோடி ரூபாய்க்கு மேல் பணம் திரட்டி இருக்கிறது.
 
இந்த நிறுவனங்கள் பொது வெளியீடு என்று கூறி பங்குகளை ஆர்பிஎஸ் முறையில் ஒதுக்கிடு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பொது வெளியீடு என்றால் அந்த நிறுவனம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். அதோடு பொது வெளியீட்டிற்கு ப்ராஸ்பெக்டஸ் போன்றவைகளையும் பங்குச் சந்தையிடம் சமர்பித்திருக்க வேண்டும். 
 
இப்படி எந்த விதியையும் கடை பிடிக்காததால் தான் செபி உடனடி தடை விதித்து, இந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், மொத்த  சரக்கு விவரங்கள், சொத்து மற்றும் கடன் விவரங்கள் என்று பல விவரங்களை கேட்டிருக்கிறது. இவைகள் அனைத்தும்  வழங்கப்பட்ட பின் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ