Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீனஸ் ரெமடீஸ் 52 வார கால இறக்கம்

இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் ரூபாய் 105க்கு வர்த்தகமாகத் தொடங்கிய வீனஸ் ரெமடீஸ் தன் 52 வார கால இறக்கம் கண்டு ரூபாய் 96க்கு வர்த்தகமாகமானது.

 
09 பிப்ரவரி 2015ல் இருந்து 184 ரூபாய்க்கு வர்ட்தகமாகி வந்த இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை இறக்கம் காணத் தொடங்கியது. மார்கன் ஸ்டான்லி மொரீஷியஸ் நிறுவனம் இந்த வீனஸ் ரெமடீஸ் நிறுவனத்தின் 58,522 பங்குகளை விற்றபின் இன்னும் அதிக இறக்கம் காணத் தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19 அன்று மெரில் லின்ச் கேப்பிட்டல் மார்கெட்ஸ் நிறுவனம் 45,144 பங்குகளை ரூபாய் 164க்கு விற்றுவிட்டது. 
 
இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 51% சரிவை சந்தித்திருக்கிறது.  தற்போது வரை தோராயமாக 20 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது.  கடந்த 2014 செப்டம்பரில் தன் 52 வார கால உச்சமான ரூபாய் 382ஐ தொட்டிருந்த இந்த பங்குகளின் விலை தற்போது ரூபாய் 123க்கு வர்த்தகம் நிறை வடைந்திருக்கிறது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP