Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமூக வலை தளங்களில் விளம்பரத்திற்கு செய்யும் செலவு அதிகரிப்பு.....

 (EY)இ.வொய் நிறுவனம் நடத்திய தன் இரண்டாவது  சோசியல் மீடியா மார்கெட்டிங் இந்தியா டிரெண்ட்ஸ் ஸ்டடியில் பல புதிய விஷயங்கள் வெளியாகி உள்ளது.

தங்கள் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் நிறுவனங்களில் 90 சதவிகித நிறுவனங்கள்  தாங்கள் விளம்பரப்படுத்துவதற்க்கும், தங்கள் பொருட்களை சந்தைபடுத்துவதற்க்கும்  ஒதுக்கீடு செய்யும் தொகையில் தோராயமாக 15 சதவிகிதத்திற்க்கும் அதிகம் சமூக வலைதளங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இது கடந்த ஆண்டு 78 சதவிகிதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. 
 
இந்த 90 சதவிகித நிறுவனங்களில் 23 சதவிகித நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சமூக வலைதலங்களில் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்த பயன்படுத்துகிறார்கள். 14 சதவிகித நிறுவனங்கள் 1 - 2 கோடி ரூபாய் வரை சமூக வலைதல விலம்பரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். 14.3 சதவிகித நிறுவனங்கள் மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சமூக வலைதளங்களில் விளம்பரத்திற்கு செலவிடுகிறார்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ