Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் எம்ஆர்எஃப் முதலீடு

 

இந்தியாவின் பெரிய டயர் நிறுவனமான எம்ஆர்எஃப் டயர் நிறுவனம் அடுத்த ஏழு ஆண்டுகளில் படிபடியாக 4,500 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் உள்ள தன் பெரம்பலூர் மற்றும் அரக்கோனம் உற்பத்தி ஆலையில் முதலீடு செய்ய உள்ளது.  உற்பத்தி ஆலையின் விரிவாக்கத்திற்க்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்த நிறுவனத்திற்கு ஐதராபாத், தமிழகம் மற்றும் கோவா போன்ற இடங்களிள் உள்ள உற்பத்தி ஆலையில்,  நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்ய முடியும். இந்த முதலீட்டால் இதன் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
 
பயணிகள் ரக கார்களில் இந்த டயர் நிறுவனம் முன்னிலை பெறுகிறது.  இந்த ரகத்தில் 28 - 30 சதவிகித சந்தை எம்ஆர் எஃப்யிடம் இருக்கிறது. கடந்த காலங்களில் சந்தை நல்ல நிலையில் இல்லாத போதும் விற்பனைக்கு பிறகான சேவையின் மூலம் தன் நிலையை சிறப்பாக நிர்வகித்துள்ளது என்பதையும் கவனிக்கத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ