Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே கோட்ட மேலாளர் ப்ளாட்பார்ம் டிக்கேட் விலையை நிர்ணயிக்கலாம்.......

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து ரயில் நிலையங்களில் வழங்கப்படும் ப்ளாட்பார்ம் டிக்கேட்டிற்கான கட்டணம் 10 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதிக பயணிகள் பயணிக்கும் போது அதிக அளவில் மற்றவர்கள் உடன் வருகிறார்கள். இதனால் பயணிகள் சிரமப்படகிறார்கள். இதனை குறைக்கத் தான் இந்த விலை ஏற்றம் என்றும் விளக்கமளித்திருக்கிறது ரயில்வே அமைச்சகம்.

அதுமட்டுமின்றி ரயில்வே கோட்ட மேலாளர் பிரத்யேகமான திருவிழா, பண்டிகை காலங்களில், ரயில் நிலையங்களில் நெரிசலை குறைக்க ப்ளாட்பார்ம் டிக்கேட்டின் விலையை 10 ரூபாய்க்கு அதிகமாக நிர்ணயிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ