Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்தாவது நாள் தொடர் இறக்கத்தில் இந்திய சந்தைகள்....

3.30 மணி நிலவரம்
ஐந்தாவது நாளாக தொடர்ந்து இறக்கத்தில் முடிந்திருக்கிறது இந்திய சந்தைகள். மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.30  புள்ளிகள் குறைந்து 28161.72 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.95 புள்ளிகள் குறைந்து 8542.95 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 51  ரூபாய் அதிகரித்து  26,249 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 68  ரூபாய் அதிகரித்து  2,998 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
 
வர்த்தக நேர  முடிவில் போன்ற ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எண்ணெய் மற்றும் காஸ், பொதுத்துறை நிறுவனம் போன்ற துறைகள்  மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாயின. 
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,108 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,699 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 115 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 24 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 26 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
லுபின் 4.50%
பிபிசிஎல் 3.55%
பார்தி ஏர்டெல் 2.77%
என் டி பி சி 1.70%
கெயில் 1.64%
 
இறக்கப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ் -3.48%
ஹிண்டால்கோ          -2.24%
ஹெச் யூ எல்          -1.68%
எஸ் பி ஐ                  -1.53%
டாடா ஸ்டீல்          -1.28%
 
1.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4.59 புள்ளிகள் உயர்ந்து 28196.61 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.75 புள்ளிகள் உயர்ந்து 8553.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.03 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் குறைந்து  26,180 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 13 ரூபாய் குறைந்து 2,943 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.20 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
தற்போது சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்க சந்தைகளில் தேக்கம் நிலவுகிறது. ஆசிய சந்தைகளைப் பொறுத்த வரை தேக்கத்திலும், இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
லுபின்        3.30%
பிபிசிஎல்        2.91%
பார்தி ஏர்டெல் 2.47%
கெயில் 1.69%
ஹெச்டிஎஃப்சி 1.58%
 
இறக்கப் பங்குகள்
ஹிண்டால்கோ            -2.28%
எஸ் பி ஐ                   -2.04%
பேங்க் ஆஃப் பரோடா    -1.53%
டாடா ஸ்டீல்            -1.52%
 
 
 
11.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 164.47 புள்ளிகள் உயர்ந்து 28356.49 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.20 புள்ளிகள் உயர்ந்து 8601.10  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.55 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 52 ரூபாய் குறைந்து 26,146 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 2,648க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,476 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து  2,944 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.19 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
சீனாவின் பி.எம்.ஐ கடந்த 11 மாதங்களில் காணப்படாத அளவுக்கு குறைந்திருக்கிறது. எனவே சீனாவின் பங்குச் சந்தையான ஷாங்காய் காம்போஸைட் ஆசியாவிலேயே அதிகபட்ச இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அதனைத் தொடர்ந்து சில ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஜப்பானின் நிக்கி225 தேக்க நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல்        3.44%
லுபின்        2.99%
பார்தி ஏர்டெல் 2.10%
ஜிண்டால் ஸ்டீல் 2.07%
சேச ஸ்டெர்லைட் 1.96%
 
இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா         -1.74%
டாடா மோட்டார்ஸ்         -1.53%
ஹிண்டால்கோ                -1.43%
என் எம் டி சி                 -1.17%
ஹீரோ மோட்டோகார்ப் -1.10%
 
 
 
10.00 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 113.55 புள்ளிகள் உயர்ந்து 28305.57 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.75 புள்ளிகள் உயர்ந்து 8580.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.37 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 16 ரூபாய் அதிகரித்து 26,198 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 18 ரூபாய் குறைந்து 2,930 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.23 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தக நேர தொடக்கத்தில் ஐ.டி, மெட்டல்ஸ் மற்றும் டெக்னாலஜி போன்ற துறைகளைத் தவிர மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஹெல்த் கேர், மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல்        1.94%
லுபின்         1.67%
ஹெச்டிஎஃப்சி 1.66%
பி ஹெச் இ எல் 1.65%
ஜிண்டால் ஸ்டீல் 1.65%
 
இறக்கப் பங்குகள்
என் எம் டி சி                -1.21%
ஹிண்டால்கோ                 -1.21%
ஹீரோ மோட்டோகார்ப் -0.97%
பேங் ஆஃப் பரோடா         -0.94%
இன்ஃபோசிஸ்                 -0.93%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close