Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக பட்ஜெட் 2015!

 தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உயரையாற்ற தொடங்கியதும் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்லவம் 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தீயணைப்பு துறைக்கு 73.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நவீனப்படுத்த 10.29 கோடி ஒதுக்கீடு
 
169 புதிய நீதி மன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
 
நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு
 
சாலைபாதுகாப்புக்கு 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
வருவாய் துறைக்கு கட்டமைப்புகளுக்காக  338.73 கோடி ஒதுக்கீடு
 
தமிழ் மொழி வளர்ச்சிக்கு 46.77 கோடி ரூபாய்
 
3.5 லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டில் வீட்டுமனை பட்டா வழங்குவதாக இலக்கு நிர்ணயம்
 
மொத்தமாக வருவாய்துறைக்கு 6123 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 
வேளான் துறையில் அதிக முதலீடு: 6613.68 கோடி ரூபாய் விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு
 
தோட்டக்கலை வளர்ச்சிக்கு 1.17 கோடி ரூபாய் ஒதுக்கீடுமின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையேயான நிலையை சமன் செய்ய நடவடிக்கை
 
13775 மொகாவாட் மின் தேவையை அரசு நிறைவு செய்துள்ளது.
 
சூரிய சக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற அரசு நடவடிக்கை
 
தமிழகத்தை பாராட்டி மத்திய அரசின் ஊக்கத்தொகை 1015 கோடி ரூபாய்
 
மின்சாரத்தை வாங்க 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தம், மாற்று மின்சார உறபத்திக்கு கூடுதல் முக்கியத்துவம்
 
மின்சாரத்துறைக்கு மொத்தமாக 13586 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
புதுப்பிக்கதக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
 
 
பயிர்கடனுக்கு 5500 கோடி ஒதுக்கீடு. உரிய நேரத்தில் கடனை செலுத்துபவர்களுக்கு  வட்டியின்றி வழங்கப்படும்.
 
88 நவீன குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை

 * 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில்  முடியும்.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.

* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு

* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

 

* நதிநீர் இணைப்புக்கு 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close