Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி - பதில் நேரம்

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி - பதில் நேரத்தில் தற்போது நாணயம் விகடன் ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக பதிலளித்து கொண்டிருக்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

உங்களது கேள்விகளை உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan <உங்களது கேள்வி>  #AskNV என ட்விட் செய்யுங்கள்!

 

நாணயம் விகடன்

ட்விட்டர் கேள்வி - பதில் நேரம் 

 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய என்ன ஆவணங்கள் தேவை?

@suresh

முகவரிச் சான்று, அடையாளச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு இருந்தாலே போதும், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கிவிடலாம்.  நிதி ஆண்டில் முதலீடு தொகை ரூ.50,000 தாண்டினால் பான் எண் கொடுக்க வேண்டி வரும்.

 குறுகிய கால முதலீட்டுக்கு அல்ட்ரா ஷார்ட் ஃபண்ட் சிறந்ததா, அல்லது லிக்விட் ஃபண்ட் சிறந்ததா? வரிக்குப்பின் எதில் அதிக வருமானம் கிடைக்கும்?

@muthu_bs

மிகக் குறுகிய கால முதலீடு என்றால் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டுகள் என்று ஒரு வகை உள்ளது. அதில் முதலீடு செய்துகொள்ளலாம். அதற்குப்பின் லிக்விட் ஃபண்டுகள், அதன்பிறகு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள். இதே வரிசையில் அவற்றில் ரிஸ்க்கும் உள்ளது. வரியைப் பொருத்தவரை, அனைத்து ஃபண்டுகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். நீங்கள் டிவிடெண்ட் ஆஃப்ஷனுக்கு சென்று, வரியின் உச்சவரம்பில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு வரிக்குப் பிந்தைய வருமானம் சற்று அதிகமாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் டைரக்ட் ஃப்ளான் முதலீடு செய்வது நல்லதா?
@murali678
நீங்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது டைரக்ட் ஃப்ளான் மூலம் முதலீடு செய்வீர்கள். அந்த திட்டங்களில் செலவீனம் சற்று குறைவு என்பதால், உங்களுடைய லாபம் சிறிது அதிகமாக இருக்கும். அதற்கு முன்பு உங்களால், ஃபண்டுகளைத் தேர்வு செய்து, முதலீடு செய்து மற்றும் ரெவியூ செய்யும் திறன் உங்களுக்கு உள்ளதா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
 
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்.ஆர்.இ./ என்.ஆர்.ஓ. அக்கவுண்ட் அவசியமா? பி.ஐ.எஸ். அக்கவுண்ட் அவசியமா?
வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது என்.ஆர்.இ. / என்.ஆர்.ஓ. அக்கவுண்ட் மூலமே முதலீடு செய்ய வேண்டும். உள்நாட்டு சேமிப்புக் கணக்கின் மூலம் முதலீடு செய்வது தவறு. பி.ஐ.எஸ் அக்கவுண்ட் (போர்ட்ஃபோலியா இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்) மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையில்லை. என்.ஆர்.ஐ நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது பி.ஐ.எஸ். அக்கவுண்ட் அவசியம் தேவைப்படும்.
 
 
எனது வயது 30. மாதம் தலா ரூ.2,000 வீதம் கீழ்க்கண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இவற்றை நான் அடுத்த 10 வருடங்களுக்கு தொடரலாமா? 1. பிர்லா சன்லைப் எம்.என்.சி ஃபண்ட், ஃபிராங்கிளின் ஸ்மாலர் கம்பெனீஸ், எஸ்.பி.ஐ. ஃபார்மா ஃபண்ட்.
 
இந்த மூன்று ஃபண்டுகளுமே நன்றாக செயல்பட்டு வரும் ஃபண்டுகள்தான். ஆகவே, உங்கள் முதலீடுட்டைத் தொடரலாம். ஒரு சிறிய பரிந்துரை. மூன்று ஃபண்டுகளுமே அதிக ரிஸ்க் உடைய ஃபண்டுகள். எஸ்.பி.ஐ. பார்மா துறை சார்ந்த ஃபண்டாகும். பிர்லா  ஒரு தீம்மை (Theme) ஃபோக்கஸ் செய்யும் ஃபண்டாகும். ஃப்ராங்கிளின் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டாகும். இவற்றின் ரிஸ்க் லெவலை நீங்கள் அறிந்து செய்திருக்கிறீர்கள் என்றால் இது ஓகே. இல்லை என்றால் டைவர்சிஃபைட் திட்டங்களுக்கு மாறிக் கொள்ளுங்கள்.
 
எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும்போது எந்தத் தேதியைத் தேர்வு செய்வது? ஒவ்வொரு தேதிக்கும் முதலீடு செய்யும் தொகையை பிரித்துப் போடுவதன் மூலம் அதிக யூனிட்டுகளைப் பெற முடியுமா?
 
எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வதே நம்முடைய முதலீட்டை சராசரி செய்யத்தான். அதை மேலும் சராசரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு தேதிகளில் பிரித்துப் போடுவதன் மூலம் எந்த ஆதாரமும் கூறவில்லை.
 
மியூச்சுவல் ஃபண்ட் ஏஜெண்டுகளை எப்படிக் கண்டுபிடிப்பது? இவர்களுக்கென்று ஏதாவது டைரக்டரி இருக்கிறதா?
 
ஆஃம்பி (Association of Mutual Fund in India) இணையதளத்தில் search financial adviser என்கிற லிங்க் மூலம் நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் ஏஜெண்ட்டை கண்டுபிடிக்கலாம். அதைவிட சிறந்தது உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தொடர்பில் இருக்கும் அட்வைரைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. 
 
நான் 30% வரி வரம்பில் உள்ளேன். என் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 5 வருட கால அளவுக்கு இருந்தால், வரிக்குப்பின் எந்த வகை ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்? என்னால் சுமாரான ரிஸ்க்தான் எடுக்க முடியும்!
 
ஐந்து வருடம் என்னும்போது நீங்கள் பேலன்ஸ்ட் ஃபண்டுகளை நாடலாம். இவற்றில் ஒரு வருடத்துக்கு மேல் உங்கள் முதலீட்டை வைத்திருந்தாலே, உங்களுக்கு வரும் வருமானத்துக்கு எந்த வரியும் இருக்காது. ஆனால், இந்த ஃபண்டுகளில் 65% பங்கு சார்ந்த முதலீடுகள் இருக்கும். ஆகவே, உங்களது முதலீட்டுக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்துக் கொள்வது. 
 
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
 
மியூச்சுவல் ஃபண்டில் பங்கு சார்ந்த முதலீட்டை நாம் பார்க்கும்போது இந்தியாவின் வளர்ச்சியை ஒட்டி நல்ல வருமானம் தர வாய்ப்புள்ளது. கடந்த 20 வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தை பல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தந்துள்ளன. மேலும், ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கையில் வருமான வரி ஏதும் கிடையாது. ரிஸ்க் பரவலாக்கப்படுவதால், ரிஸ்க் அட்ஜஸ்டட் வருமானம் சிறப்பாக உள்ளது. சிறிய தொகைகளில் ஒவ்வொரு மாதமும் சேமிக்கும் வாய்ப்பும் உள்ளது.
 
ரிலையன்ஸ் ஈக்விட்டு ஆப்பர்சூனிட்டீஸ், டாடா டிவிடெண்ட் ஈல்ட், ஆக்ஸில் லாங்க்டேர்ம் ஈக்விட்டு - இதில் மூன்றில் எந்த ஃபண்ட் சிறந்தது?
 
உங்களின் வயது, முதலீட்டு நோக்கம், ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை வைத்துத்தான் உங்களுக்கான ஃபண்டை முடிவு செய்ய முடியும். ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டு ஒரு டாக்ஸ்சேவர் ஃபண்டாகும். ஆகவே உங்களுக்கு டாக்ஸ் சேவிங் தேவையில்லை என்றால், அந்த பண்டைத் தவிர்க்கலாம். 
மற்ற இரண்டு ஃபண்டுகளும் நன்றாக செயல்பட்டு வரும் திட்டங்களே. ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்டுதான்.
 
நான் ஈக்விட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?
 
நீங்கள் இ.எல்.எல்.எஸ் அல்லது டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் 80c பிரிவில் உங்களுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். எந்த பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும், ஓராண்டுக்குப்பிறகு வரும் வருமானத்துக்கு வரி கிடையாது. 
 
ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, எஸ்.பி.ஐ. மேக்னம் குளோபல் - நான் தேர்வு செய்துள்ள இரண்டு ஃபண்டுகளுமே ஒகேயா?
 
நீங்கள் தேர்வு செய்துள்ள இரண்டு ஃபண்டுகளுமே நன்றாக செயல்பட்டு வரும் ஃபண்டுகளே. ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஃபண்டாகும். எஸ்.பி.ஐ. மேக்னம் குளோபல் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஃபண்டாகும். மேலும் உங்களைப் பற்றிய விவரங்களை சொன்னீர்கள் என்றால் உங்கள் தேர்வு சரியா என்பதை சொல்ல முடியும்.
 
 
கடன் சார்ந்த் திட்டங்கள், கம்பெனி பிக்சட் டெபாசிட்டுகள், கம்பெனி பாண்டுகள் - இவற்றில் உள்ள வித்தியாசத்தைக் கூறுங்கள்.
 
கடன் சார்ந்த திட்டங்கள் பொதுவாக 40 அல்லது 50 நிறுவன கடன் உபகரணங்களில் முதலீடு செய்கின்றன. ஆகவே, இவற்றில் ரிஸ்க் அளவு குறைவு. 
கம்பெனி பிக்சட் டெபாசிட் எந்த செக்யூரிட்டி இல்லாத உபகரணமாகும். ஆகவே, நிறுவனத்தின் தரத்தைப் பொறுத்து நீங்கள் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
கம்பெனி பாண்டுகளில் செக்யூர்ட் மற்றும் அன்செக்யூர்ட் ஆகிய இரண்டு வருகின்றன. இவற்றில் செக்யூரிட் சிறந்தது. 
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மூன்று உபகரணங்களின் கிரெடிட் ரேட்டிங்கைப் பார்த்து முதலீடு செய்யுங்கள். AAA என்றால் பாதுகாப்பானது என்று அர்த்தம்.

தற்போதை நிலையில் பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?
 
நீங்கள் டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தால், ஒரு பகுதியை பார்மா ஃபண்டில் முதலீடு செய்யலாம். பார்மா துறை அடுத்த பல ஆண்டுகளுக்கு நன்றாகவே இருக்கும். ஆகவே ஒருபகுதியை முதலீடு செய்வது நன்மை பயக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஏதேனும் இதுவரை மூடப்பட்டுள்ளதா? அப்படி மூடப்பட்டுள்ளதெனில், முதலீட்டாளர்களின் நிலை என்ன?
 
இதுவரை இந்தியாவில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் மூடப்படவில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தொழிலிலிருந்து விலக் நினைத்தால், அந்த நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. உதாரணமாக கடந்த காலத்தில் சோழா மற்றும் பிடலிட்டி மியூச்சுவல்  ஃபண்ட் நிறுவனங்கள் எல் அண்ட் டி ஃபண்ட் நிறுவனம் வாங்கிவிட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. உங்கள் கேள்வி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திவால் ஆக வாய்ப்புள்ளதா எனில், அப்படி திவால் ஆகும் வாய்ப்பு மிக, மிக, மிக குறைவு. ஏனென்றால், சட்டதிட்டங்கள் அவ்வளவு கடுமையாக உள்ளன.
 
நான் 15 வருடங்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வீதம் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இரண்டு நல்ல ஃபண்டுகளைக் கூறுங்கள்.
 
நீங்கள் உங்களின் வயது மற்றும் நோக்கம் போன்றவற்றைக் கூறவில்லை. நீங்கள் ஒரு இளம்வயதினர் என்றும் முதல்முறை முதலீட்டாளர் என்றும் எடுத்துக் கொள்கிறோம். தரமான லார்ஜ்கேப் அல்லது பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் நீங்கள் முதலீட்டை மேற்கொள்ளலாம். யூ.டி.ஐ. ஆப்பர்சூனிட்டீஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்ட் ஃபண்டுகளை நீங்கள் முதலீட்டுக்காக கருதலாம்.
 
என் வயது 48. என்னால் மாதம் 5,000 ரூபாய் சேமிக்க முடியும். இந்த சேமிப்பை 58 வயது வரை தொடர முடியும். எனது தேவை ஓய்வுகால கார்பஸ். எனக்கான முதலீட்டுத் திட்டத்தைக் கூறுங்கள்.
@michealmark
நீங்கள் ஓய்வுபெற இன்னும் 10 வருடங்கள் இருப்பதால் தாராளமாக பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம். லார்ஜ் + மிட் கேப் திட்டங்கள் உங்கள் முதலீட்டுக்கு சிறந்ததாக அமையும். கீழக்கண்ட ஃபண்டுகளில் தலா 2,500 வீதம் நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம்.
1. யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட்
2. பிர்லா சன்லைப் ஈக்விட்டு ஃபண்ட்
 
எனது மகனுக்கு தற்போது 27. அவரால் மாதம் ரூ.10,000 சேமிக்க முடியும். சிறந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 20 வருடங்கள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும்?
 
அடுத்த 20 வருடங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளில் 12 - 15% வருமானம் கிடைக்கும் என எடுத்துக்கொண்டால், உங்கள் மகனின் முதலீடு 86 லட்சம் ரூபாயிலிருந்து 1.23 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு உங்களது மகன் பங்கு சார்ந்த நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
 
 
ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர், பிர்லா ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டு, எல்.டி. ஈக்விட்டி -இவற்றில் எந்த ஃபண்டில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மாதம் ரூ.5000 முதலீடு செய்யச் சிறந்தது?
 
உங்களுக்கு வரி சேவிங் தேவையில்லை என்றால், டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.மீதமுள்ள இரண்டு திட்டங்களும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடு - வேறுபாடு என்ன?
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும்போது அது நீண்ட கால முதலீடாகும். இதற்கு குறைந்த காலம் குறுகிய கால முதலீடு என்று எடுத்துக் கொள்ளலாம்.
 
பங்கு சார்ந்த முதலீடு என்று வரும்போது நீண்ட கால முதலீடுதான் சிறந்ததாக அமையும். மியூச்சுவல் ஃபண்டுகளில் குறுகிய கால முதலீடுகளும் உள்ளன. அவை, லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகைகளில் உள்ளன. நீண்ட கால முதலீட்டில் லாபம் கணிசமாக கிடைக்கும். குறுகிய கால முதலீட்டில் எஃப்.டி.க்கு ஒட்டிய வருமானம் கிடைக்கும்.
 
எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை எனது போர்ட்ஃபோலியோவை நான் ரெவியூ செய்ய வேண்டும்?
 
 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பொதுவாக ஒருவருடத்துக்கு ஒருமுறை ரெவியூ செய்தாலே போதும். நீங்கள் மிகவும் ஆக்டிவ்வாக ரெவியூ செய்ய வேண்டும் என்றால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரெவியூ செய்தால் போதுமானது.

  5 வயதில் இருக்கும் என் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சிறந்ததா அல்லது செல்வ மகள் திட்டம் சிறந்ததா?

 

பொதுவாக, நீண்ட கால முதலீட்டுக்கு இந்தியச் சந்தையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்தது. அவற்றில் வருமானம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர் என்றால் செல்வமகள் திட்டம் சிறந்தது. உங்களுடைய இரு குழந்தைகளின் திருமணத்துக்கும் மற்றும் இரண்டாவது கல்விச் செலவுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். முதல் குழந்தையின் கல்லூரிப் படிப்புக்கு செல்வமகள் திட்டத்திலோ அல்லது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலோ முதலீடு செய்யலாம்.
 
பங்குகள் போல் மியூச்சுவல் ஃபண்டுகளில் தினசரி வர்த்தகம் செய்ய முடியமா?
@saravanan
 
முடியாது. மியூச்சுவல் ஃபண்டுகளில் தினசரி ஒருமுறைதான் வர்த்தகம் செய்ய முடியும். நீங்கள் ஒரே நாளில் பலமுறை வாங்கி விற்க முடியாது. அவ்வாறு செய்ய விரும்பினால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் இ.டி.எஃப். திட்டங்களில் அவ்வாறு செய்துகொள்ளலாம்.
  
தங்கம் விலை இறங்கும் இந்தத் தருணத்தில் பேப்பர் கோல்ட் முதலீடு உசிதமா?
 
 
 
 
 
 தங்கம் உங்களுக்கு அவசியமாக இருந்தால், நீங்கள் தாராளமாக பேப்பர் கோல்ட் என்று சொல்லப்படுகிற கோல்ட் இ.டி.எஃப். அல்லது ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம். அவசியம் இல்லை என்கிறபட்சத்தில், நீங்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நாடலாம். ஏனென்றால், இனிவரும் சில ஆண்டுகளுக்கு தங்கத்தைவிட பங்கு சார்ந்த திட்டங்கள் நல்ல வருமானத்தை தர வாய்ப்புள்ளது.
 
ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்கிறார்களே, அது என்ன?
 
@buddha_rt
 
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பொதுவாக, 40 அல்லது 50 நிறுவனப் பங்குகளில் அல்லது உபகரணங்களில் முதலீடு செய்கின்றன. இதுபோன்ற இரண்டு, மூன்று திட்டங்களில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் முதலீடு செய்கிறதென்றால், அதனை நாம் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்கிறோம். அதாவது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்கிற ஃபண்டாகும். 
 
என் 5 வயது மகள் பெயரில் கோல்ட் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா?
@manikandan12
 
நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவையாக இருக்கும். அது தவிர, உங்களின் காசோலை, அட்ரஸ் மற்றும் ஐ.டி. ஃப்ரூப் தேவையாக இருக்கலாம். நீங்கள் குழந்தையின் கார்டியனாக இருப்பீர்கள். கணக்கை ஆபரேட் செய்வதும் நீங்களாகவே இருப்பீர்கள். குழந்தைக்கு 18 வயது ஆனபின், அந்தக் குழந்தையின் கையெழுத்து, அட்ரஸ் மற்றும் ஐ.டி. ஃப்ரூப் ஆகியவற்றை ஃபண்டு நிறுவனத்தில் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.
 
 
ஹெச்.டி.எஃப்.சி. மிட்கேட் ஆப்பர்சூனிட்டீஸ்  Vs ஃப்ராங்கிளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் - இந்த இரண்டில் நீண்ட காலத்துக்கு எது நல்லது?
இரண்டுமே மிட் மற்றும் ஸ்மால் பங்குகளை ஃபோக்கஸ் செய்யும் திட்டமாகும். நீங்கள் அக்ரசிவ் வருமானத்தை எதிர்பார்ப்பவர் என்றால் ஃப்ராங்கிளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டை தேர்வு செய்துகொள்ளலாம். இல்லை என்றால், ஹெச்.டி.எஃப்.சி. மிட்கேப் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் நன்றாக இருக்கும். இரண்டு திட்டங்களுமே நீண்ட காலத்துக்கு நல்ல திட்டங்கள்தான். இந்த இரண்டு திட்டங்களும் சந்தை இறங்கும்போது அதிகமாக இறங்கும் என்பதை மனதில் கொண்டு முதலீடு செய்வது நல்லது.
 
60,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இதை முதலில் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, பிறகு எஸ்.டபிள்யூ.பி. முறையில் ஈக்விட்டு மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாமா?
 
தாராளமாக நீங்கள் செய்துகொள்ளலாம். இது உங்களுடைய ரிஸ்க் அளவைக் குறைக்கும். எஸ்.டபிள்யூ.பி. முறையில் முதலீடு செய்யும்போது தினசரி மாற்றும் வசதியும் உள்ளது. 
 
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு தேவை?
ஒரே நேரத்தில் முதலீடு செய்யும்போது பல நிறுவனங்கள் ரூ.5,000 முதலீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றன. சில நிறுவனங்கள் ரூ.500, ரூ.1000 முதலீட்டிலிருந்துகூட ஆரம்பிக்கின்றன. எஸ்.ஐ.பி. முறையில் நீங்கள் முதலீடு செய்யும்போது மிகக் குறைந்தபட்சமாக முதலீட்டை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், ரூ.1000 தொடங்கி பல ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close