Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.... சென்செக்ஸ் 27,500 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகம்

 

3.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்  654 புள்ளிகள் சரிந்து வ்தன் 24 ஆவது மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. நிஃப்டி 188 புள்ளிகள் சரிந்து தன் நான்காவது மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 654.24 புள்ளிகள் குறைந்து 27457.58 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  188.65 புள்ளிகள் குறைந்து 8342.15 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 

10 கிராம் தங்கத்தின் விலை 360  ரூபாய் அதிகரித்து  26,843 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 145  ரூபாய் அதிகரித்து  3,239 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

வர்த்தக நேர  முடிவில்  மூலதன பொருட்கள் துறை மட்டும்   ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, ஹெல்த் கேர், மெட்டல் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில்  வர்த்தகமாயின. 

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 951 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,820 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 115 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் ஒன்பது நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 41 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்ற பங்குகள்:

பி பி சி எல்                1.82%

பார்தி ஏர்டெல்         1.18%

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.08%

என் எம் டி சி         0.80%

அம்புஜா சிமென்ட்ஸ் 0.52%

 

இறக்க பங்குகள்:

ஹெச்டிஎஃப்சி -5.23%

பி என் பி         -4.73%

விப்ரோ -4.42%

சேச ஸ்டெர்லைட் -4.32%

 

1.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 363.95 புள்ளிகள் குறைந்து  27747.88  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 94.65  புள்ளிகள் குறைந்து  8436.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.  இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.20 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 217 ஆதிகரித்து   26,700 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 185 ரூபாய் அதிகரித்து  3,279  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.58  ரூபாயாக வர்த்தகமாகிறது. 

இந்தியாவின் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இன்னும் 11 சதவிகிதம் ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்கப்படாமல் இருக்கிறது. அதோடு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் தொகை இந்த ஏலத்தால் அதிகரித்திருக்கிறது. இந்திய சந்தைகளின் இறக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. 

உலக அளவில் அனைத்து சந்தைகளும் இறக்கத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.  ஆசியாவில் அதிகபட்சமாக ஹாங்காய் காம்போஸைட்  0.59 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. நிக்கி 1.41 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 

 

ஏற்ற பங்குகள்:

பி பி சி எல்                 3.03%

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.19%

பாரதி ஏர்டெல்          1.16%

அம்புஜா சிமென்ட்ஸ் 0.86%

லார்சன்          0.81%


இறக்க பங்குகள்:

ஹெச்டிஎஃப்சி -3.93%

இன்ஃபோசிஸ் -2.68%

ஹெச் யூ எல் -2.17%

ஜி என்டர்டெயின்மென்ட்-2.13%

 

11.30 மணி நிலவரம் 

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 272.04 புள்ளிகள் சரிந்து 27839.81 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 68.50 புள்ளிகள் சரிந்து 8462.30  புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகத் துவங்கியுள்ளன. நிஃப்டி 8500 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது,

10 கிராம் தங்கத்தின் விலை 140 ரூபாய் அதிகரித்து  26,623 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,693 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,518 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 141 ரூபாய் அதிகரித்து 3,235 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.71 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

தற்போதைய நிலவரப்படி மூலதன பொருட்கள் மற்றும் எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.  வங்கி, ஹெல்த் கேர், ஐ.டி, மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் சற்றே அதிக இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.  

ஏற்ற பங்குகள்:

பி பி சி எல்                  2.84%

பிஹச் இஎல்          2.22%

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.59%

லார்சன்          1.50%

பாரதி ஏர்டெல்          1.41%

 

இறக்க பங்குகள்:

ஹச்டிஎஃப்சி -3.92%

இன்ஃபோசிஸ் -2.09%

கோல் இந்தியா -2.06%

சேச ஸ்டெர்லைட் -1.91%

 

10.00 மணி நிலவரம்

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிந்து 27906 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 8469  புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகத் துவங்கியுள்ளன.சென்செக்ஸ் 28000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது,
 
 10 கிராம் தங்கத்தின் விலை 132 ரூபாய் அதிகரித்து  26,483 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 99 ரூபாய் அதிகரித்து 3,094 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.62 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
அமெரிக்காவில் வெளியாகியுள்ள பொருளாதார தகவல்கள் சரியாக இல்லாததால் டாலரின் மதிப்பு சர்வதேச நாடுகளின் கரெண்சிக்கு எதிராக வீழ்ச்சியை சந்தித்து இருப்பது ஆசிய சந்தைகளை இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 172 பங்குகள் விலை அதிகரித்தும், 307 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன. இன்று இந்த மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் இன்று எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
 
ஏற்ற பங்குகள்:
பாரதி ஏர்டெல் 1.81
பிஹச் இஎல் 1.42
பவர் கிரிட் கார்ப் 0.85
கெயில் 0.78
எம்&எம் 0.67
 
இறக்க பங்குகள்\:
ஹச்டிஎஃப்சி -3.20
விப்ரோ -1.73
ஏசிசி -1.69
செஸா ஸ்டெர்லைட் -1.58
ஐசிஐசிஐ வங்கி -1.50
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ