Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேக்கம் தொடரும் இந்திய சந்தைகள்.....

 
1.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 52.19  புள்ளிகள் அதிகரித்து   27509.77 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.30 புள்ளிகள் உயர்ந்து  8345.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 151 ரூபாய் குறைந்து 26,650 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 68 ரூபாய் குறைந்து 3,185 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.60 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஜப்பானின் நிக்கி 225 தன் 52 வார கால இறக்கத்தை கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய  சந்தைகள் தேக்கத்திலும் நிலையான ஏற்றத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
இன்ஃபோசிஸ்          2.68%
எஸ் பி ஐ                  2.51%
ஐசிஐசிஐ பேங்க்  2.01%
லார்சன்         1.94%
ஹிண்டால்கோ 1.85% 
 
இறக்கப் பங்குகள்
பார்தி ஏர்டெல் -5.97%
ஐடியா செல்லூலர் -4.96%
கெர்ய்ன் இந்தியா -2.80%
ஏசியன் பெயின்ட்ஸ்-2.78%
 
 
11.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 51.78  புள்ளிகள் அதிகரித்து   27509.36 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.35 புள்ளிகள் உயர்ந்து  8348.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.14 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 72 ரூபாய் குறைந்து 26,729 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2700 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2525 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.   கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 71 ரூபாய் குறைந்து 3,182 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.61 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
அடுத்த 12 மாதங்களுக்கு இந்திய சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படும் என்றும், அதில் குறிப்பாக தொலைதொடர்புத் துறை சார்ந்த பங்குகள் நன்றாக செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 
 ஏற்றப் பங்குகள்
இன்ஃபோசிஸ் 2.46%
ஹிண்டால்கோ 2.39%
டி சி எஸ்         1.61%
லார்சன் 1.54%
டாடா மோட்டார்ஸ் 1.63%
 
இறக்கப் பங்குகள்
ஐடியா செல்லூலர் -4.35%
பார்தி ஏர்டெல் -3.07%
பி என் பி         -2.63%
பேங்க் ஆஃப் பரோடா -2.45%
 
 
10.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.15  புள்ளிகள் அதிகரித்து   27487.73 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.75 புள்ளிகள் உயர்ந்து 8342.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.06 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 79 ரூபாய் குறைந்து 26,722 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 67 ரூபாய் குறைந்து 3,186 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.65 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தக நேர தொடக்கத்தில் மூலதன பொருட்கள், ஐ.டி, டெக்னாலஜி மற்றும் மெட்டல்  போன்ற துறைகளைத் தவிர மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஹெல்த் கேர், வங்கி போன்ற துறைகள் சற்று கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள்
 
இன்ஃபோசிஸ்         2.46%
ஹிண்டால்கோ 2.39%
டாடா மோட்டார்ஸ் 1.63%
டி சி எஸ்                 1.61%
லார்சன்          1.54%
 
இறக்கப் பங்குகள்
 
பேங்க் ஆஃப் பரோடா        -2.80%
பி என் பி                         -2.40%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.14%
சன் பார்மா                         -2.12%
ஏசியன் பெயின்ட்ஸ்         -1.94%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close