Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி..!

‘அதிக வாராக் கடன், அதிக வட்டி விகிதம் உள்ளிட்ட காரணங்களால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பேங்க் நிஃப்டி குறியீடு மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 10% இறங்கி இருக்கிறது. 

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கனரா பேங்க் உள்ளிட்டவைகளின் விலை வேகமாக இறங்கி வருகிறது. பேங்க் ஆஃப் இந்தியா, தேனா பேங்க், தனலஷ்மி பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஜம்மு அண்ட் காஷ்மீர் பேங்க், யூகோ பேங்க் போன்றவற்றின் பங்கின் விலை 52 வார குறைந்தபட்ச விலைக்கு கீழே வர்த்தகமாகி வருகிறது. 
 
பொதுத் துறை வங்கிகள் பொதுவாக 20% டிவிடெண்டை மத்திய அரசுக்கு வழங்கி வருகின்றன. அவற்றின் லாபம் குறைந்துள்ள நிலையில் இந்த டிவிடெண்ட் வழங்க அவை கடன் வாங்க வேண்டும் அல்லது சந்தையில் நிதி திரட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் குறைவான டிவிடெண்ட் வழங்க அனுமதிக்கும் படி சில சிறிய பொதுத் துறை வங்கிகள் மத்திய அரசிடம் கேட்டிருப்பதாக தகவல்.   
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் குறுகிய காலத்தில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடனுக்கான வட்டியை மேலும் குறைப்பதில் ஆர்பிஐ கால தாமதம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அந்த வகையில் வங்கிப் பங்குகளின் விலை இன்னும் குறையக் கூடும். 12 முதல் 18 மாதங்கள் காத்திருக்க தயார் என்றால் தற்போதைய நிலையில் தனியார் துறையை சேர்ந்த ஆக்சிஸ் பேங்க், யெஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் பொதுத் துறையை சேர்ந்த எஸ்பிஐ, பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க் ஆகிய பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்கிறார்கள் வங்கித் துறை அனலிஸ்ட்கள்.

- சி.சரவணன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ